கர்நாடகாவில் மஜத- காங்கிரஸை அலறவிட்ட சுயேச்சை ஷம்பு கலோலிகர்.. அமுதா ஐஏஎஸ்ஸின் கணவர் யார் இவர்?
பெங்களூர்: தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும் உள்துறை செயலாளருமான அமுதாவின் கணவர் கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு இரு பெறும் கட்சிகளையே அலறவிட்டார்.
வடமாநிலங்களில் பாஜக பெரும்பாலான இடங்களில் ஆட்சியில் இருக்கின்றது. இந்தியாவில் அருணாசல் பிரதேசம், அஸ்ஸாம், கோவா, குஜராத், ஹரியானா (கூட்டணி) , மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா (கூட்டணி), மணிப்பூர் (கூட்டணி), நாகாலாந்து (கூட்டணி), புதுவை (கூட்டணி), சிக்கிம் (கூட்டணி), உத்தரப்பிரதேச, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்தும் கூட்டணியிலும் இருந்து ஆட்சியை நடத்துகிறது.

வடமாநிலங்களில் இத்தனை இடங்களில் காவி கொடி பறந்தாலும் தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டும் பாஜக ஆட்சி இருந்தது. அதுவும் ஏற்கெனவே இருந்த மஜத+காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அமர்ந்ததாகும். இந்த நிலையில் கர்நாடகாவுக்கு அண்மையில்தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை வென்றது. அது போல் பாஜக 66 இடங்களிலும் மஜத 19 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் 2013 இக்கு பிறகு இந்த முறை அதிக இடங்களில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்த போகிறது. கர்நாடகா தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆயினும் கர்நாடகாவில் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை குறைந்த இடங்களிலேயே பாஜக வென்றது.
இந்த நிலையில் ஒரு சில இடங்களில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு சுயேச்சைகள் களத்தில் அலறவிட்டனர். அந்த வகையில் ஷிகாரிபுரா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட்டு வென்றார். ஆனால் இந்த தொகுதியில் சுயேச்சையை விட காங்கிரஸ் கட்சி படுமோசமாக தோல்வியை சந்தித்துள்ளது.
விஜயேந்திரா 81,810 வாக்குகளையும் சுயேச்சை உறுப்பினர் 70,802 வாக்குகளை பெற்றார். இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 11,008 ஆகும். காங்கிரஸ் வேட்பாளர் கோனி மலாடேஷா வெறும் 8,101 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். அந்த வகையில் அமுதாவின் கணவர் ஷம்பு கலோலிகர், 58 வயதான இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர்.

இவர் கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டம் ரெய்பேக் ஒன்றியத்தில் உள்ள யபரட்டியை சேர்ந்தவர். 1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தார். தமிழகத்தில் கதர் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையின் இணைச் செயலாளராக இருந்து அண்மையில் தான் விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் முன்பு 30 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த இவர் மத்திய பெட்ரோலியம் துறையின் இயக்குநராகவும் இருந்துள்ளார்.
தனது சொந்த ஊரில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதற்காக அதை செய்து தர முடிவு செய்தார். இதற்காக கர்நாடகா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே 2022 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இவருடைய உறவினர்களும் அரசியல் சார்ந்த பதவிகளில் இருந்துள்ளனர்.
ஷம்பு காங்கிரஸ் சார்பில் ரெய்பேக் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் அங்கு அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் தனது தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார். அவருக்கு மக்களிடையே பெரிய ஆதரவு கிடைத்தது. வாக்கு எண்ணிக்கையில் ஷம்பு 57400 வாக்குகளைப் பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட ஐஹாலே துரியோதன் மகாலிங்கப்பா 67502 வாக்குகளை பெற்றுள்ளார். காங்கிரஸ், மஜத வேட்பாளர்களை விட கூடுதலாக வாக்குகளை ஷம்பு பெற்றிருந்தார். ஷம்பு தோல்வி அடைந்திருந்தாலும் மஜத, காங்கிரஸ் கட்சிகளை அலறவிட்டு இத்தனை வாக்குகளை பெற்றுள்ளது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications