குட்டி டவுசர் போட்டுகிட்டு சுத்தக் கூடாது.. நடு ரோட்டில் பெண்ணிடம் எகிறிய பெங்களூர் மூதாட்டி
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இளம்பெண் ஷாட்ஸ் அணிந்திருந்ததை எதிர்த்து பாட்டி ஒருவர் பேசிய வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பாட்டியின் கருத்துக்கு பலர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
மனித நாகரிகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போதெல்லாம், அது குறித்து தொடர் விமர்சனங்கள் எழுவது இயல்பானதுதான். உதாரணமாக, ஆடை விஷயத்தை எடுத்துக்கொள்வோம். "அந்த காலத்தில் எப்படியெல்லாம் இருந்தோம் தெரியுமா? இப்போ என்னடான்னா இஷ்டத்துக்கும் டிரஸ் போடுறீங்க" என்று வயதில் மூத்தவர்கள் பலர் கூறுவதை கேட்க முடிகிறது. இதுபோன்ற சம்பவம்தான் தற்போது பெங்களூரில் நடந்திருக்கிறது.

அதாவது பெங்களூரின் பரபரப்பான சாலை ஒன்றில், இன்ஸ்டாகிராம் பிரபலம் டேனி பட்டாச்சார்ஜி நடந்து சென்றிருக்கிறார். அப்போது எதிரே வந்த ஒரு பாட்டி, டேனி பட்டாச்சார்ஜி ஷாட்ஸ் அணிந்து வந்ததற்காக கடுமையாக கோபப்படுகிறார். கன்னடத்தில் அவரை திட்டுகிறார். இதை வீடியோவாக பதிவு செய்த டேனி பட்டாச்சார்ஜி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கிறார். தற்போது டிரெண்டிங்கில் இந்த வீடியோதான் இருக்கிறது.
வீடியோ குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். பலர் ஆடை குறித்து பாட்டி கூறிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். பெண்கள் மிகவும் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். அதுதான் அவர்களுக்கான மரியாதையை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். அதேபோல, வீட்டிற்குள் போடும் ஆடைகளையெல்லாம் ஏன் தெருவில் போட்டுக்கொண்டு வர வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் சிலர் இந்த கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, ஆடை என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். எனவே இது குறித்து யாருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை கிடையாது என்று கூறியுள்ளனர். மேலும், ஆடையை வைத்துதான் ஒருவரை எடை போடுகிறோம் என்று கூறுவதே தவறானது என்றும் கூறுகின்றனர். பெண்களின் ஆடைகளால்தான் அவர்கள் மீது மதிப்பு கூடுகிறது எனில், பெண்களின் சிந்தனைகளை இந்த சமூகம் பார்க்க மறுக்கிறது என அர்த்தம் என்றும் கூறுகின்றனர்.
வேறு சிலர், பாட்டிக்கு எதிர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். பெங்களூரில் ஷாட்ஸ் தடை செய்யப்பட்ட உடையா? என்று கேட்டிருக்கிறார்கள்.
மனிதர்கள்தான் இந்த உலகில் மிகவும் ஜனநாயக பண்பு கொண்ட, உயர்ந்த நாகரிகம் கொண்ட உயிரினம் என்று சொல்லிக்கொள்கிறோம். இந்த உயர்ந்த நாகரிகம் என்பது, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனையும், அவரவர் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ அனுமதிப்பதுதான். எது சரி எது தவறு என்பதை அவரவரே முடிவு செய்துக்கொள்வதுதான். அந்த வகையில் பெங்களூரில் நடந்த பஞ்சாயத்து குறித்து அவரவரின் சொந்த பார்வையே முடிவு செய்யட்டும் என்றும் ஒரு சிலர் கூறியுள்ளனர்.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications