கார்கள் மீது ஆணுறைகள்.. அசிங்கமாக எழுதி வைத்த லெட்டர்கள்.. காரணம் கேட்டா அசந்துருவீங்க.. பெங்களூரில்
பெங்களூர்: பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் முன்பக்க கண்ணாடி மீது இளைஞர் ஒருவர், ஆணுறை பாக்கெட்டுகளையும், அசிங்க அசிங்கமாக எழுதிய வாக்கியம் அடங்கிய காகிதத்தையும் வைத்து விட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள ஒரு பகுதிதான் ஒயிட்பீல்டு. எனவே இங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை நெருக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கம் ஏற்படுகிறது என்றால் இன்னொரு பக்கம் முறையான வாகன பார்க்கிங் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே சாலையோர நடைபாதையில் கார்களை நிறுத்தி விட்டு அவசர பணிகளுக்காக செல்வோர் அதிகரித்து வருகின்றனர்.

கார்கள் மீது ஆணுறை
இது நடந்து செல்வோருக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது. அவர்கள் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் சாலைப் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரிக்கிறது. இந்த நிலையில்தான் ஒயிட்பீல்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கைந்து கார்களின் முன்பக்க கண்ணாடி மீது ஒரு நபர் வரிசையாக ஆணுறை பாக்கெட்டுகளை அடுக்கி வைத்து விட்டுச் சென்றுள்ளார் .கூடவே ஒரு பேப்பரில் ஆங்கிலத்தில் "You like A******, Please don't reproduce" என்று அசிங்கமாக எழுதிவைத்துள்ளார்.

இதுதான் காரணம்
காரை எடுத்துச் செல்ல வந்த அதன் உரிமையாளர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். "இப்படி கண்ட இடத்தில் காரை நிறுத்தும் நீங்கள், 'அதற்கு' சமம். எனவே உங்களை மாதிரி குழந்தைகளை பெற்றுவிடாதீர்கள். இந்த ஆணுறைகளை பயன்படுத்துங்கள்," என்று பொருள்படும் வகையில் இவ்வாறு அந்த நபர் ஆணுறைகளை வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

வாலிபர்
சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் போது அவ்வாறு செய்தது ஒரு இளைஞர் என்று தெரிகிறது. எனவே இப்போதெல்லாம் சாலை ஓரத்தில் காரை நிறுத்துவதற்கு வாகன ஓட்டிகள் கூச்சப்பட ஆரம்பித்துள்ளனர். அதேநேரம் காரை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை என்பதால் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓவர்தான்
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையாக போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறார்கள். சாலை விதி மீறல்களை தட்டிக் கேட்கிறார்கள், அந்த வகையில் பெங்களூரில் இந்த இளைஞர் மிக நூதனமாக செயல்பட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும், இது கொஞ்சம் ஓவர்தான் என்பதால், இப்படி செய்த இளைஞரை வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications