பொதுப் போக்குவரத்தில் ஆண்களுக்கு இனி பாதுகாப்பு இல்லையா? நெட்டிசன் எழுப்பிய கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், விமானங்கள் ஆகியவற்றில் ஆண்கள் இனி பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியுமா? பெண்கள் சிலர் போலியான சம்பவங்களை உருவாக்கி, தங்களைப் புகைப்படம் எடுத்ததாகவோ, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவோ அல்லது முறையற்ற வகையில் தொட்டதாகவோ குற்றம்சாட்டி, ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் அவற்றைப் பரப்பிய பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பின்னர் உண்மை வெளிவருகிறது!

கேரளப் பேருந்து சம்பவம்:

ஒரு பெண், தீபக் என்பவர் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களால் தீபக் தற்கொலை செய்துகொண்டார்.

Are buses metros and planes safe for men anymore Questions raised by a netizen

போலீஸார் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆட்சேபனைக்குரிய நடத்தை எதுவும் பதிவாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி விமானச் சம்பவம்:

விமானத்தில் உடன் பயணம் செய்த ஒருவர் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை நடிகை ரிச்சா சத்தா, "Make him famous" (அவரைப் பிரபலமாக்குங்கள்) என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பினார்.

பின்னர், சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளைப் பரப்பியதற்காக டெல்லி உயர் நீதிமன்றம் அவரைக் கண்டித்ததாகவும், அவதூறான பதிவுகளை நீக்க உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்பாவி ஆண்களின் கண்ணியத்தையும் நற்பெயரையும் விலையாகக் கொடுத்து, பொதுப் போக்குவரத்து வைரல் காணொளிகளை உருவாக்குவதற்கான களமாக மாறிக்கொண்டிருக்கிறதா? ஒருவர் மீது குற்றம்சாட்டப்படுவது மட்டுமே அவர் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் அல்ல. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ மட்டுமே குற்றத்தை நிரூபிக்கும் சான்றும் அல்ல. ஒரு ஆணின் வாழ்க்கை என்பது சமூக வலைதளங்களில் நடத்தப்படும் பரிசோதனை அல்ல!" இவ்வாறு கூறியுள்ளார்.

Are buses metros and planes safe for men anymore Questions raised by a netizen

இந்த விமர்சனங்களில் இருந்து புரிய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பொதுவாக ஒருவரை பற்றி குற்றச்சாட்டு எழுந்தவுடன் ஒருவரைச் சமூக வலைதளங்களில் குற்றவாளியாகச் சித்தரிப்பது மிகப்பெரிய தவறு. விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். அதேபோல் சில சம்பவங்களில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதற்காக, பெண்கள் பொய்யான புகார்களைத் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள் என்று பொதுவாக கூறவும் கூடாது.

பெங்களூரு மெட்ரோ சம்பவத்தை பொறுத்தவரை விசாரணை முடிவடைவதற்கு முன்பே அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு பொய் என்றோ, சம்பந்தப்பட்ட ஆண் குற்றவாளி என்றோ முடிவெடுப்பது சரியானதும் கிடையாது. அதேபோல் பொது இடத்தில் இருப்பதால் ஒருவரை ரகசியமாக வீடியோ எடுப்பது எப்போதும் நியாயமானதாகிவிடாது. சூழல், நோக்கம், வீடியோவின் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். பெண்கள் தாங்கள் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக ஆண்களை பலிகடா ஆக்க கூடாது. ஆண்களின் நற்பெயரையும் பெண்களின் பாதுகாப்பையும் சமமாக சமூகம் கருத தொடங்கினால் தான் பிரச்சனை ஏற்படாது. ஒரு பெண் கூறிவிட்டார் என்தற்காகவே அவரை குற்றவாளியாக்குவது சமூகத்தில் தொடருகிறது என்பது கசப்பான உண்மை. சட்டத்தின் முன்பும் சமூகத்தின் முன்பும் இரு தரப்பினருக்கும் நியாயமான அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+