ஸ்ருதி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு.. அர்ஜுன் மாமனார் என்ன சொல்கிறார் தெரியுமா?
Recommended Video

பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடுவேயும், நடிகர் அர்ஜுனுக்கு அவரது குடும்பம் மற்றும் கன்னட திரையுலக வட்டாரத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது.
ஒன்றரை வருடங்கள் முன்பாக ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது, எனது முதுகை அர்ஜுன் தடவினார் என்றும், இறுக்கி பிடித்தார் என்றும் நடிகை ஸ்ருதி குற்றம்சாட்டியிருந்தார்.
கன்னட திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான முனிரத்னா அம் மாநில செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், குற்றச்சாட்டில் கொஞ்சமும் உண்மையில்லை என்று தெரிவித்தார்.

குழந்தை நட்சத்திரம்
மேலும் அவர் கூறியதாவது: சினிமா உலகத்திற்கு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 40 வருடங்களுக்கு மேலாக அவர் சினிமா துறையில் இருக்கிறார். இதுவரை அவர் மீது ஒரு சிறு கரும்புள்ளி விழுந்தது கிடையாது. சுருதியை பொறுத்தளவில் சினிமா துறைக்கு புதியவர். எனவே அவர் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை சரி செய்வதற்காக தொட்டு இருப்பாரே தவிர தவறான எண்ணத்துடன் அர்ஜுன் தொட்டு இருக்கமாட்டார். ஸ்ருதி தான் தவறாக நினைத்துக் கொண்டு உள்ளார்.

முன்னணி நடிகைகள்
ஸ்ருதி ஹரிஹரன் முதலில் நடிப்பை கற்றுக் கொள்ளட்டும். நீண்டகாலம் இந்த துறையில் வளர்ந்த பிறகுதான், மனிதர்களை புரிந்து கொள்ள முடியும். இது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான பக்குவம் வர அவருக்கு இன்னும் நீண்டகாலம் உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகர், நடிகைகளுடன் அர்ஜுன் நடித்துள்ளார். ஆனால் இப்படியாக அவர் யாரிடமும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வந்ததே கிடையாது. சுருதியின் குற்றச்சாட்டில் அர்த்தமே கிடையாது. விஷ்மயா திரைப்படத்தின் நிகழ்ச்சியின் போது இதே அர்ஜுனை வாயாரப் புகழ்ந்து சுருதி பேசியிருந்தார். இவ்வாறு தயாரிப்பாளர் முனிரத்னா தெரிவித்தார்.

மாமனார் ஆதரவு
அர்ஜூனின் மாமனாரும் பிரபல நடிகருமான ராஜேஷ் இதுபற்றி கூறுகையில், அர்ஜுன் ஒரு நிஜமான ஜென்டில்மேன். அவரது நடத்தையின் காரணமாகதான் நல்ல பெயரை ஈட்டியுள்ளார். அழகான மனைவியும், குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். ஆனால் சுருதியின் புகார் என்பது அர்ஜூனின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலானது.

மகள் வயது
ஒருவேளை அர்ஜுன் இளமை காலத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தால் கூட நம்பியிருக்காலம். ஆனால் இப்போது அர்ஜுன் வயது 56. ஸ்ருதி வயதில் அர்ஜுனுக்கு குழந்தைகள் உள்ளநிலையில், இவரிடம் அவர் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை நம்ப முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications