பாஜக VS காங்கிரஸ்.. கர்நாடகா தேர்தலில் வெற்றி யாருக்கு?புதிய கருத்து கணிப்பில் செம ட்விஸ்ட்! ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் சேனலின் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பில் யாரும் எதிர்பாராத வகையில் செம ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
கர்நாடகா சட்டசபைக்கான 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் வெளியாக உள்ளது.
ஏப்ரல் 13ம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்கி ஏப்ரல் 20ம் தேதி நடக்கும். ஏப்ரல் 21ல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் நிலையில் மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு மே 10ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

கருத்து கணிப்புகள்
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தான் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே தான் தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம்
இந்த கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என தெரிவித்துள்ளன. அதாவது பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என எந்த கட்சிக்கும் ஆட்சிஅமைக்க தேவையான 113 தொகுதிகளில் வெற்றி கிடைக்காது என தெரிவித்துள்ளன. ஆனாலும் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க சில கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக 95 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளன. ஜேடிஎஸ் கட்சி 25 முதல் 30 இடங்களில் வெற்றி றெபலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் சுவர்ணா சேனல்
இந்நிலையில் தான் கர்நாடகாவில் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பின் முடிவு என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. அதாவது இந்த தேர்தல் எந்த கட்சிக்கும் சாதாரணமாக இருக்காது என்பதை இந்த கருத்து கணிப்பின் முடிவு உணர்த்தியுள்ளது.

பாஜக, காங்கிரசுக்கு எவ்வளவு இடம்?
இருப்பினும் இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சியை விட பாஜக முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 76 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 28 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 52 இடங்களில் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை எளிதில் கணிக்க முடியாததாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் இந்த கருத்து கணிப்பில் ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் அலர்ட்டாகி உள்ளன.

கடலோர கர்நாடகாவில் யாருக்கு வெற்றி?
மேலும் மண்டல வாரியாக பார்த்தால் கடலோர கர்நாடகாவில் மொத்தம் உள்ள 19 தொகுதிகளில் பாஜக 12 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெறும். 4 தொகுதிகளில் டப் பைட் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலைநாடு மண்டலத்தில் பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் எனவும், 6 தொகுதிகளில் கடும் போட்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

பெங்களூர் நகரில் யார் முன்னிலை?
பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் 28 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தலா 11 இடங்களில் வாகைசூடும் எனவும் 4 தொகுதிகளில் ரிசல்ட் எப்படி கணிக்க முடியாததாக உள்ளதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது. மும்பை கர்நாடகா மண்டலத்தில் 50 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 20 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும் வெற்றி பெறும். மாறாக 15 தொகுதிகளில் டப் பைட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓல்டு மைசூரில் ஆதிக்கம் யார்?
அதேபோல் ஓல்டு மைசூர் பிராந்தியில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், ஜேடிஎஸ் 12 இடங்களிலும் பாஜக 7 இடங்களிலும் வெற்றி பெறும் னெவும் 11 தொகுதிகளில் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைதராபாத் கர்நாடகா மண்டலத்தில் பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களில், ஜேடிஎஸ் 2 இடங்களில் வெற்றி பெறலாம் எனவும், 12 தொகுதிகளில் வெற்றி என்பது கணிக்க முடியாத நிலையில இருப்பதாக ஏசியாநெட் சுவர்ணா நியூ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications