Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் பூம்பூம் மாடு முட்டியதால் லாரிக்கு அடியில் விழுந்த இளைஞர்.. நொடிப்பொழுதில் நடந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் மகாலக்‌ஷ்மி நகர் லேஅவுட் பகுதியில் சாலையில் பெண் ஒருவர் இழுத்துச் சென்ற பூம்பூம் மாடு, திடீரென இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது பாய்ந்தது. இதில் அந்நபர் எதிரே வந்த லாரியின் அடியில் விழுந்தார். நல்ல வேளையாக நூலிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பாக வீடியோ சமூக ஊடங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் மட்டுமல்ல.. பெங்களூர் நகரிலும் மாடுகளால் மனிதர்கள் திடீரென ஆபத்தை சந்திக்கிறார்கள். சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் சென்னையில் ஏற்படுத்தும் பாதிப்பு வார்த்தைகளால் சொல்லவே முடியாது.. திடீரென சாலையில் செல்வோர் மீது ஆக்ரோசத்துடன் மோதுவது அடிக்கடி சென்னையில் நடக்கும் நிகழ்வு. மாடுகளை சாலையில் சுற்றித்திரிந்தால் கவனமாக செல்ல வேண்டும் இல்லாவிட்டால் சென்னைவாசிகள் நிம்மதியாக வீடு போய் சேர முடியாது..

Bangalore A bike rider who was thrown under a lorry after being hit by a cow miraculously survived

சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக மாடுகள் தான் உள்ளன. மாநகராட்சியால் எந்த பெரிய நடவடிக்கையும் இன்று வரை எடுக்க முடியாத நிலையே சென்னையில் இருக்கிறது.. விபத்துக்கள் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அந்த நேரத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் சாலையில் மாடுகளை அவிழ்த்துவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையே நீடிக்கிறது.

சென்னையை போல் பெங்களூர் நகரிலும் மாடுகளால் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது. பெங்களூர் மகாலக்‌ஷ்மி நகர் லேஅவுட் நீச்சல் குளம் சந்திப்பு அருகே பெண் ஒருவர் சாலையில் பூம்பூம் மாட்டினை இழுத்து சென்று கொண்டிருந்தார். அந்த சாலையின் ஒருபக்கம் பெரிய டிரக் லாரி ஒன்று கடந்து சென்று கொண்டிருந்தது. சாலையின் இந்த பக்கம் பூம்பூம் மாட்டினை பெண் இழுத்து சென்றார். சாலையில் மாடு அமைதியாக கடந்து செல்வதாக தோன்றியது.

இந்நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் எதிர்திசையில் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பூம்பூம் மாடு திடீரென முட்டி தூக்கி வீசியது. இதில் பைக்கில் வந்தவவர் லாரியின் சக்கரங்களுக்கு நடுவில் சிக்கி கொண்டார். நல்ல வேளையாக உடனடியாக சுதாரித்த டிரைக் டிரைவர் நொடிப்பொழுதில் பிரேக் போட்டு பைக்கில் வந்தவர் மீது சக்கரத்தை ஏற்றாமல் அப்படியே நிறுத்தினார்.

இதனால் சில நொடி பொழுதியில் அதிர்ஷ்டவசமாக பைக் டிரைவர் உயிர் தப்பினார். சமயோஜிதமாக செயல்பட்டு டிரக் டிரைவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+