நம்பர் 1.. பெங்களூர் ரயில் நிலையத்திற்கு அசத்தல் "அப்டேட்".. மாற்றத்தை பார்த்தா ஆடிப்போய்டுவீங்க!
பெங்களூர்: பல கோடி ரூபாய் செலவில் பெங்களூரில் இருக்கும் பயப்பனஹள்ளி ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்ற இருக்கிறார்கள். இங்கு செய்யப்பட போகும் மாற்றங்களை கேட்டால் நீங்களே ஆடிபோய்விடுவீர்கள்.
பெங்களூரில் இருக்கும் பயப்பனஹள்ளி ரயில் நிலையம் அதிக மக்கள் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இந்த ரயில் நிலையத்தில் முக்கியமான மாற்றங்களை செய்ய மத்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் நம்பர் 1 ரயில் நிலையமாக இதை மாற்ற இருக்கிறார்கள். இதன் திட்டத்தை கேட்கவே ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பல கோடிகளை செலவு செய்ய உள்ளனர்.

எப்படி நடக்கும்
அதன்படி இந்திய ரயில் நிலைய மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் இந்த பணிகள் செய்யப்பட உள்ளது. இதற்காக 250 கோடி ரூபாயை செலவு செய்ய இருக்கிறார்கள். மொத்தமாக பயப்பனஹள்ளி ரயில் நிலையத்தை அப்டேட் செய்ய போகிறார்கள். state-of-the-art என்று கூறப்படும் வகையில் இந்தியாவில் எங்குமே இல்லாத அளவிற்கு இங்கு அப்டேட் செய்ய உள்ளனர்.

எவ்வளவு தூரம்
மொத்தம் 26,00,000 சதுர அடிக்கு இந்த ரயில் நிலையத்தை அமைக்க உள்ளனர். விமான நிலையம் போல இது காணப்படும் என்று கூறுகிறார்கள். இதில் கண்டிப்பாக காத்திருப்பு இடங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், விளையாட்டு தளங்கள், விற்பனை மையங்கள் இடம்பெற்று இருக்கும். அதேபோல் இங்கே லிப்ட், எலிவேட்டர்கள் இடம் பெற்று இருக்கும் என்று கூறுகிறார்கள். இது இல்லாமல் இன்னும் அசாத்திய சில வசதிகளும் இங்கே உள்ளது.

என்ன வசதிகள்
பயணிகளுக்கு ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு பெறும் அறைகள் இருக்கும். முழுக்க முழுக்க ஏஐ தொழில் நுட்பத்தில் இந்த ரயில்நிலையம் அமைக்கப்படும். உங்களுக்கு உதவ ஆண்டிராய்டு தொடு திரைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அல்ட்ரா மாடர்ன் வசதிகளை கொண்டு இந்த ரயில் நிலையம் உருவாக்கப்படும். குழந்தைகள் விளையாட தனி இடம் அமைக்கப்பட்டு இருக்கும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வசதிகள் இருக்கும்.

செம திட்டம்
மூன்று அடுக்கு மாடி போல இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. பெங்களூர் மெட்ரோவோடு இதை இணைக்க உள்ளனர். அப்படி விமான நிலையங்களில் இருக்கும் வசதிகளை இங்கே கொண்டு வர இருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் போல இதன் உட்பக்கம் இருக்கும் . ஜப்பான் தொழில்நுட்பத்தில் இந்த ரயில்வே நிலையம் அமைக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதன் மாடல் புகைப்படங்கள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications