கொஞ்சம் கூட பதற்றம் இல்லை.. பெங்களூர் கஃபே குண்டுவெடிப்பு..அடுத்து "அந்த" நபர் என்ன செய்தார்.. ஷாக்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த வாரம் நடந்த குண்டுவெடிப்பு பரபரப்பைக் கிளப்பியது. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

ராமேஸ்வரம் கஃபே: இதற்கிடையே பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் குண்டை வைத்துவிட்டுப் பல முறை தனது உடைகளையும் தோற்றத்தையும் மாற்றியுள்ளார். இவை அனைத்தும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வைத்த நபர் சென்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்
அதில் மூன்று இடங்களில் மூன்று வெவ்வேறு ஆடைகளை அணிந்து கொண்டு அந்த நபர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் வீடியோவில் சந்தேகிக்கப்படும் நபர் ஐஇடி வெடிகுண்டை வைக்க கடந்த மார்ச் 1ஆம் தேதி காலை 11.45 மணியளவில் ஹோட்டலுக்குச் செல்வது போல இருக்கிறது. அந்த வீடியோவில் அந்த நபர் முழு கை சட்டை மற்றும் வெளிர் நிற போலோ தொப்பி, கண்ணாடிகள் மற்றும் மாஸ்க் அணிந்துள்ளார்.
பெங்களூர் குண்டுவெடிப்பு.. மாஸ்க் இல்லாமல் சுற்றிய குற்றவாளி.. "அவரே தானா.." பரபர போட்டோ வெளியீடு
சிசிடிவி: அதன் பிறகு வெறும் 9 நிமிடத்தில் அவர் கஃபேவில் குண்டுவைத்துவிட்டுக் கிளம்பி இருக்கிறார். மதியம் 2.30 மணியளவில் அவர் மற்றொரு பேருந்தில் ஏறியுள்ளார். அதில் அவர் ஊதா நிற ஹாவ் ஹேண்ட் சட்டை மற்றும் கருப்பு தொப்பி அணிந்துள்ளார். இந்த சிசிடிவி காட்சியும் அவர் மாஸ்க் அணிந்துள்ளார்.. இருப்பினும் கண்ணாடி இல்லை. இது இரண்டாவது சிசிடிவி காட்சியாகும்.

அடுத்து 3ஆவது சிடிடிவி காட்சி பெல்லாரி மத்திய பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது. அன்றைய தினம் இரவு 9 மணிக்குப் பதிவான அந்த வீடியோவில் சந்தேகிக்கப்படும் அந்த நபர் தொப்பியோ கண்ணாடியோ அணியவில்லை. குண்டு வைத்த நபர் தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காகவே இப்படி தொடர்ச்சியாக ஆடைகளை மாற்றிக் கொண்டே வந்துள்ளார்.
பதற்றம் இல்லை: குண்டுவெடிப்புக்கு முன்னும் பின்னும் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துப் பார்க்கும் போது அந்த நபர் தொடர்ச்சியாக ஆடைகளை மாற்றிக் கொண்டே இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், குண்டு எதிர்பாராத விதமாக வெடித்து இருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறிய நிலையில், இந்த நபரின் நடத்தையை வைத்துப் பார்க்கும் போது அது திட்டமிடப்பட்டது என்பது உறுதியாகிறது.
மேலும், அந்த நபர் எந்த இடத்திலும் அவசரப்படவில்லை.. பதற்றமும் இல்லை: அனைத்து இடங்களிலும் அவர் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது போலவே உள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுகொண்டாலும், குண்டுவெடிப்பு நடந்து 8 நாட்களாகியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை குற்றவாளி குறித்து தகவல் வழங்குவோருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், குண்டுவெடிப்பு நடந்த ராமேஸ்வரம் கஃபே சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications