நைட் ஷிப்ட் பரிதாபங்கள்! தூங்கி வழிந்த டிரைவர்! சாவியை வாங்கி ஓட்டுநராகவே மாறிய பெங்களூர் தொழிலதிபர்
பெங்களூர்: அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து திரும்பியுள்ளார். அப்போது அவரது கார் டிரைவர் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தள்ளாடி இருக்கிறார். அப்போது இந்த தொழிலதிபர் கூலாக அவரை தூங்கச் சொல்லிவிட்டு இவரே காரை ஓட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.. மெட்ரோ இல்லாமல் கார், பைக் மூலம் நீங்கள் எதாவது இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் சாலையிலேயே அதிக நேரம் காத்திருக்கும் சூழல் இருக்கும்.

இதனால் அங்குள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கூட வருவாய் ஈட்ட அதிக நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் அங்குப் பல வினோத சம்பவங்களும் நடக்கிறது. அப்படி ரொம்பவே வினோதமான சம்பவம் தான் பெங்களூரில் இப்போது நடந்துள்ளது.
தொழிலதிபர்:
கேம்ப் டைரிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருபவர் மிலிந்த் சந்த்வானி. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) படித்துள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் செல்ல அவர் கார் புக் செய்த நிலையில், அப்போது மிக வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை சந்த்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். அதில் டிரைவர் அருகே தூங்கிக் கொண்டு இருக்க.. இவர் காரை ஓட்டி செல்கிறார். டிரைவரால் விழித்திருக்க முடியாததால்.. அதிகாலை 3 மணிக்குக் காரை ஓட்ட நேர்ந்ததாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கலகல சம்பவம்:
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நேற்றிரவு 3 மணியளவில் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து திரும்பினேன். அப்போது தான் எதிர்பார்க்காத இந்தச் சம்பவம் நடந்தது. எனது டாக்ஸி டிரைவர் மிகவும் தூக்கத்தில் இருந்தார்.. டீ மற்றும் சிகரெட் குடித்தும் பார்த்தார் ஆனாலும் அவரால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நானே காரை ஓட்டுவதாகச் சொன்னேன். நொடியும் தாமதிக்காமல் அவர் கார் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
அவர் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் காரை அவர் ஓட்டும் நிலையில், பக்கத்தில் இருந்த சீட்டில் டிரைவர் அயர்ந்து தூங்குவது தெளிவாகத் தெரிகிறது. சந்த்வானி கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி பெங்களூரில் சாலைகளில் வழி கண்டுபிடித்து ஓட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அன்பைப் பகிருங்கள்:
மேலும் அவர், "எனக்குக் கலவையான எண்ணமே தோன்றியது. டிரைவர் என்னை முழுமையாக நம்பி கார் சாவியைக் கொடுத்தார். அதில் எனக்கு மகிழ்ச்சி.. அதேநேரம் வாழ்க்கையை நடத்த அவர் எந்தளவுக்குத் தன்னை தானே வருத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கிறது. மேலும், அவருக்கு நான் ரூ. 100 டிப்ஸ் கொடுத்துவிட்டு வந்தேன்.
வாழ்க்கை என்பது எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது. அனைவரிடமும் அன்பாக இருங்கள்.. டிரைவிங் திறனை டச்சில் வைத்துக் கொள்ளுங்கள்.. உங்களுக்கு எதிர்பாராத நேரங்களில் அவை கை கொடுக்கலாம்" என்று அவர் ஜாலியாக பதிவிட்டு இருக்கிறார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications