Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா, அக்கா கழுத்தை அறுத்து கொன்ற பெங்களூர் இளைஞர்.. கடன் பிரச்சனையால் தானும் தற்கொலைக்கு முயற்சி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் கடன் பிரச்சினையால் ஒரு குடும்பமே எடுக்கக்கூடாத முடிவை எடுத்துள்ளது. மோகன் என்ற நபர் அவரது தாய் மற்றும் சகோதரியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த செய்தி ஒட்டுமொத்த பெங்களூரையும் அதிர வைப்பதாக இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

கடன் பிரச்சினைகளால் சில குடும்பங்கள் எடுக்கக்கூடாத முடிவை எடுத்துவிடுகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் அப்படி தான் தேவையில்லாத கடனால் ஒட்டுமொத்த குடும்பமே சிதைந்து போயுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று பெரும் கடன் சுமையால் தற்கொலைக்கு முயன்றது.

Bangalore Debt Tragedy Entire family took extreme step Man Attacks Mother Sister and Nephew

உயிரிழப்பு

இதில் இருவர் உயிரிழந்த சூழலில், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.. இதில் உயிரிழந்தவர்கள் ஆஷா (55) மற்றும் அவரது மகள் வர்ஷிதா (34) எனத் தெரிய வந்துள்ளது. வர்ஷிதாவின் சகோதரர் மோகன் கௌடா (32) மற்றும் வர்ஷிதாவின் 11 வயது மகன் மயங்க் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோகன் தான் இந்த கொடூரத்தைச் செய்துள்ளார். அவர் தனது தாய், சகோதரி, சகோதரி மகனின் கழுத்தை அறுத்துள்ளார். பிறகு தானும் தற்கொலைக்கு முயன்றார். தங்கள் குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் கடன் அதிகமானதாலேயே வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுப்பதாகச் சொல்லி வீடியோ பதிவு செய்து, அதை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதன் பிறகே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வீடியோ

மோகன் குடும்பத்தினர் இது போல தங்களுக்கு வீடியோவை அனுப்பியதால் பதறிய உறவினர்கள், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வீடியோவை பார்த்த உறவினர்கள் சிலர் உடனே மோகன் வீட்டிற்கு விரைந்தனர். இருப்பினும் கதவுகள் பூட்டியிருந்தது. இதையடுத்து பின்புற வாசல் வழியாக உறவினர்கள் நுழைந்துள்ளனர்.

உறைந்துபோன உறவினர்கள்

உள்ளே அவர்கள் கண்ட காட்சி ஒரு நொடி உறைய வைத்துவிட்டது. நான்கு பேரும் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். அதற்குள் தகவல் கிடைத்த போலீசாரும், சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் அங்கு வந்தபோதே ஆஷா மற்றும் வர்ஷிதா உயிரிழந்திருந்தனர். இதையடுத்து அவர்களை உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த மோகன் மற்றும் மயங்க் ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பினர்..

கடன்

அந்த குடும்பத்தினரின் அதிகப்படியான கடன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகப் பெங்களூர் ரூரல் போலீசார் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் தெரிவித்தார். மோகன் அங்கு உகாதி மற்றும் தீபாவளி சீட்டுகளை நடத்தி வந்துள்ளார். ₹5 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான சீட்டுகளை மோகன் நடத்தி வந்துள்ளார். ஆடம்பர வாழ்க்கை முறையில் மோகம் கொண்டிருந்த மோகன் குடும்பத்தினர் இல்லாத பணத்தைக் கடன் வாங்கி செலவழிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மளமளவெனக் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் இந்த மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் கூறுகிறார்கள்.

கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலாமல் குடும்பத்தினர் இம்முடிவை எடுத்ததாக உறவினர்களும் கூறுகிறார்கள். போலீசார் முதற்கட்ட விசாரணையும் கூட கடன் தான் இதற்குக் காரணமாக இருக்கும் எனச் சொல்லப்படும் சூழலில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+