ஆபாச படத்திற்கு அடிமையான பெங்களூர் ஐடி இளைஞர்.. மாணவிகளின் வீட்டில் நுழைந்து ஐயோ.! ஆபாசத்தின் உச்சம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஆபாசப் படத்திற்கு அடிமையான இளைஞர் ஒருவர் முகம் சுளிக்க வைக்கும் சம்பவத்தைச் செய்துள்ளார். மாணவிகள் வசித்த வீடுகளில் அத்துமீறி நுழைந்த அந்த இளைஞர் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளார். இது இப்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இந்தக் காலத்தில் ஆபாசப் படங்கள் என்பது ஈஸியாக கிடைக்கும் ஒன்றாக மாறிவிட்டு. இணையத்தில் சில நொடிகளில் ஆபாசப் படங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற சூழலே இருக்கிறது. 18 வயதுக்கு குறைவானவர்கள் இதைப் பார்க்கக்கூடாது என்ற போதிலும், அந்த விதிகள் எல்லாம் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவது இல்லை.

ஆபாசப் படத்திற்கு அடிமையான இளைஞர்
இதனால் இளைஞர்கள் பலரும் ஆபாசப் படங்களைப் பார்த்து, அதற்கு அடிமையாகிறார்கள். இதனால் சில நேரங்களில் அவர்கள் கீழ்த்தரமான செயல்களிலும் செய்கிறார்கள். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது.. அங்கு மாணவிகளின் உள்ளாடைகளைத் திருடியதற்காக 25 வயது பொறியியல் பட்டதாரி ஒருவரை துமகூரு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் துமகூரு பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் எனக் கூறப்படுகிறது.
அதாவது அந்த வீட்டிற்கு மாணவிகள் முதலில் குடியேறியுள்ளனர். முதலில் சில காலம் எல்லாம் நார்மலாகவே இருந்துள்ளது. ஆனால், சமீப காலங்களாக அவர்களின் உள்ளாடைகள் திருட்டுப் போக ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் இதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ஆனால், இந்த உள்ளாடை திருட்டு தொடர்கதையாகவே அந்த மாணவிகள் பயந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் தங்கள் கட்டிட ஓனரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
உள்ளாடைகளைத் திருடிய இளைஞர்
போலீஸில் புகார் அளிக்க அவர்கள் பயந்த நிலையில், கட்டிட ஓனர் கடந்த வெள்ளிக்கிழமை நியூ எக்ஸ்டென்ஷன் போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.. இதையடுத்து விசாரணையை ஆரம்பித்த போலீசார் முதற்கட்டமாக அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அப்போது அங்கு பைக்கில் வரும் அந்த ஐடி ஊழியர், மாணவிகள் வீட்டிற்கு அருகே தனது வண்டியை நிறுத்திவிட்டு உள்ளாடைகளைத் திருடுவது தெரிய வந்துள்ளது.
ஒப்புக்கொண்ட இளைஞர்
இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அந்த இளைஞர் இங்கு மட்டுமின்றி எஸ்.ஐ.டி பகுதி, எஸ்.எஸ்.புரம் மற்றும் அசோக்நகர் ஆகிய இடங்களிலும் இதேபோல பெண்களின் உள்ளாடைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் கொண்ட அவர், அதற்கு அடிமையாகிவிட்டதாலே இதுபோல செய்துள்ளார்.
யார் அந்த நபர்
கைது செய்யப்பட்ட அந்த நபர் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆசிரியர்களாக உள்ளனர். அவரது மூத்த சகோதரரும் ஒரு பொறியாளராக வேலை செய்து வருகிறார். குடும்பத்தில் யாருக்குமே அந்த இளைஞர் இப்படியொரு மோசமான செயலை செய்து வருவது தெரியாதாம். போலீசார் கைது செய்ய வீட்டிற்குச் சென்ற போதே இது குறித்துத் தெரிந்து அதிர்ந்து போய் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் அந்த நபரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். விடுவிக்கப்பட்டார்.
கட்டிட ஓனரே போலீஸில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், மாணவிகள் புகார் அளிக்கவோ அல்லது சாட்சி வாக்குமூலம் அளிக்கவோ தயாராக இல்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அந்த நபர் எப்போதும் நீச்சல் பயிற்சிக்குச் செல்வாராம். அதை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது உள்ளாடைகளைத் திருடியதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications