பெங்களூரில் இப்படி ஒரு பெண்ணா? இவரெல்லாம் ஒரு அம்மாவா? ச்சே, இந்த அக்கிரமத்தை பாருங்க.. ஓ மை காட்
பெங்களூரு: பெற்ற தாய் செய்த காரியத்தை பார்த்து கதிகலங்கி போயிருக்கிறது கர்நாடகா மாநிலம்.. என்ன நடந்தது?
பெங்களூருவில் பனசங்கரியில் உள்ள சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் பத்மஜா.,. 40 வயதாகிறது.. இவரது மகள் சாஹிதி.. 19 வயதாகிறது.. கர்நாடக மாநிலத்தில் பியூசி என்று சொல்லப்படும் கர்நாடகா மத்யமிகா வித்யா தேர்வினை சாஹிதி எழுதியிருந்தார்.. அந்த பரீட்சை முடிவு நேற்று வெளியாகியிருந்தது..

கடும் ஆத்திரம்: அனைத்து பாடத்திலும் சாஹிதி நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்த நிலையில், இலக்கியத்தில் மட்டும் கம்மியான மார்க் எடுத்திருப்பதாக தெரிகிறது.. ரிசல்ட் வந்ததுமே, ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு மார்க் எடுத்தாய்? என்று மகளிடம் விசாரித்தார் பத்மஜா..
இலக்கியம் தேர்வு மார்க் கேட்டதுமே கொந்தளித்துவிட்டார் பத்மஜா.. உடனே சாஹிதியை சரமாரியாக திட்டினார்.. ஆவேசத்தில் மகளை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினார்.. மார்க் குறைந்ததற்கான காரணத்தை சாஹிதி சொல்லியும், பத்மஜாவின் ஆத்திரம் அடங்கவில்லை. இதனால், எரிச்சலடைந்த சாஹிதி, கிச்சனுக்கு சென்று, கத்தியை கொண்டு வந்து பத்மஜாவை 4 முறை குத்தினாராம்..
அனுமதி: இதனால் மேலும் ஆத்திரமடைந்த பத்மஜா மகளை கொடூரமாக தாக்கியதுடன், மகளிடமிருந்த கத்தியை பிடுங்கி, மகளையே கண்மூடித்தனமாக குத்த துவங்கினார். இதில் ரத்தம் பொலபொலவென கொட்ட, சாஹிதி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அலறியடித்து கொண்டு ஓடிவந்தனர்.. பத்மஜாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.. பிறகு போலீசுக்கும் தகவல் தந்தார்கள்.. இதையடுத்து, சாஹிதியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. பத்மஜாவுக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு: ஒரே ஒரு மார்க் குறைந்ததால் மகளை, பெற்ற தாயே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெங்களூருவை கலங்கடித்து வருகிறது. போலீசார் இதுகுறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications