மனைவிக்கு மாதவிடாய் காலத்தில்.. கணவனுக்கும் லீவு கொடுத்து அசத்தும் பெங்களூரு நிறுவனம்
பெங்களூரு: மனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் காலத்தில் உடன் இருந்து பார்த்து கொள்வதற்காக கணவனுக்கும் விடுமுறை கொடுத்து அசத்தி வருகிறது பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம்.
பல்வேறு நிறுவனங்களில் ஆண், பெண் பேதங்கள் அதிகமாக காணப்படும். அதேபோல் திருமணமான பெண்கள் மாதவிடாய் போன்ற கடினமான நேரத்தில் விடுமுறை கூட எடுக்க முடியாமல் வேதனையுடன் பணியாற்றும் நிலையும் இருக்கும்.
ஆனால் ஒரு சில விதிவிலக்கான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மாதவிடாய் நேரத்தில் விடுமுறை உள்ளிட்ட சலுகைகள் வழங்குகின்றன

பெங்களூரு நிறுவனம்
அப்படித்தான் பெங்களூருவில் ஸ்டார்ட் அப் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்று வழங்குகிறது. ஹார்சஸ் புரோடக்ஸன்ஸ் என்ற நிறுவனம் பெங்களூருவில் இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில் 60 சதவீத பெண்களும். 40 சதவீதம் பேர் ஆண்களும் வேலை செய்கிறார்கள். பலர் தம்பதிகளாக இந்நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

கணவருக்கும் லீவு
இந்த நிறுவனம் பெண்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 250 ரூபாய் சிறப்பு தொகை வழங்கி 2 நாள் விடுமுறையும் அளிக்கிறது. இதே நிறுவனத்தில் கணவரும் வேலை செய்தால், மனைவிக்கு ஆறுதலாக வீட்டில் இருந்து கவனித்து கொள்வதற்காக சம்பளத்துடன் விடுமுறை அளிக்கிறது.

நம்பிக்கையுடன் இருப்பார்கள்
ஆண் , பெண் பாகுபாடு இல்லால் ஒற்றுமையாக குடும்பம் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஹார்சஸ் புலோடக்ஸ்ன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சலோனி அகர்வால் கூறுகையில், "மாதவிடாய் காலத்தில் பெண்கள் அடிக்கடி வயிறு வலியால் அவதிப்படுவார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். எனவே அப்படிப்பட்ட நேரத்தில் விடுமுறை வழங்குவதுடன் அவர்களின் கணவரும் அருகில் இருந்தால் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதை பெண்கள் உணர்வார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்படுகிறது" என்றார்.
Recommended Video

மருத்துவ விடுப்பு இல்லை
மாதவிடாய் காலத்தில் மனைவிக்கும், அவருக்கு உதவியாக இருக்க கணவருக்கும் விடுமுறை அளிப்பதை அந்த நிறுவனம் மருத்துவ விடுப்பில் கூட கணக்கில் எடுப்பதில்லையாம். ஆங்காங்கே வேலை ஆட்களை எடுப்பதே கடினமான இருக்கும் நிலையில், தம்பதிகளை வேலைக்கு சேர்த்துக் கொண்டு குடும்பமாக பணிபுரிய அனுமதிக்கும் பெங்களூரு நிறுவனம், மாதவிடாய் நேரத்தில் விடுமுறை விடுவதை பலரும் ஆச்சர்யத்துடன் வரவேற்கிறார்கள். ஊழியர்களை உறவுகளாக, நண்பர்களாக பார்க்கும் நிறுவன முதலாளிகளும் நாட்டில் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம் தான். இதற்கிடையே அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மாதவிடாய் நேரத்தில் விடுமுறை விடுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications