பெங்களூர் டிராபிக்கில் இதுவேறயா! லேப்டாப் பார்த்துக்கிட்டே கார் ஓட்டிய பெண்! போலீசார் செய்த சம்பவம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெண் ஒருவர் மடியில் லேப்டாப்பை வைத்து வேலை பார்த்துக்கொண்டே கார் ஓட்டிச்சென்றார். சக வாகன ஓட்டிகள் இதை வீடியோ எடுத்து வைரலாக்கிய நிலையில், போலீசார் அந்த பெண்ணின் முகவரியை கண்டுபிடித்து அபராதம் விதித்துள்ளனர். பெங்களூர் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே பெண் வாகன ஓட்டி ஒருவர் பொறுப்பற்ற முறையில் சென்றதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்தியாவின் சிலிகான் வாலி என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பெங்களூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எப்போதுமே அங்கு அதிகம் காணப்படும். உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரும் முன்னணி வகிக்கிறது. இவ்வளவு போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலும் பெங்களூர் வாகன ஓட்டிகள் சிலர் சாலையில் செய்யும் அட்டகாசங்கள் விபத்துக்களுக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு கூடுதலாகவும் அமைகிறது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் ரேசில் செல்வது போல அசுர வேகத்தில் பயணிப்பது, போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது என வாகன போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுகிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் என்றால், சாலையில் வாகனத்தை ஓட்டும் போதே லேப்டாப்பில் வேலை பார்த்த்துகொண்டே பெண் ஒருவர் சென்றது சக வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பைக்கில் செல்லும் போது பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டே செல்லும் காட்சிகளை அடிக்கடி பார்த்து இருக்க முடியும். இது தொடர்பான வீடியோக்கள் கூட அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகும். ஆனால் தற்போது கார் ஓட்டுபவரே ஸ்டீரியங்கில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டு சென்றது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கோவிட் காலத்தில் பெரிதும் உதவியது வீட்டிலிருந்தே பணி செய்யும் 'வொர்க் பிரம் ஹோம்' கான்செப்ட். இது இன்னும் சில நிறுவனங்களில் நீடிக்கத்தான் செய்கிறது. நிரந்தரமாகவே பலருக்கு வீட்டில் இருந்தபடி பணிகள் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்து உள்ளது.எங்கு சென்றாலும் ஒரு லேப்டாப் இருந்தால் அனைத்து பணிகளும் ஜரூராக நடக்கிறது. ரயில், பஸ், விமானம் என பலரும் பணிகளை ஆங்காங்கே பார்ப்பதை காண முடிகிறது.
"work from home not from car while driving" pic.twitter.com/QhTDoaw83R
— DCP Traffic North, Bengaluru (@DCPTrNorthBCP) February 12, 2025
இந்நிலையில் பெங்களூருவில் ஆர்த்தநகரில் ஒரு பெண், காரில் இருந்து பணி செய்தது (வொர்க் பிரம் கார்) சமூக வலைதளங்களில் பரவியது. பெங்களூர் ஆர்த்தநகரில் காரில் சென்ற போதுதான் அந்த பெண் லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டே சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து போலீசாரின் கவனத்திற்கு சென்றது. போலீசார் காரின் பதிவெண்ணை வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
கார் ஓட்டும் போதே வேலை பார்த்து செல்லும் வீடியோ பரவிய நிலையில், நெட்டிசன்களும் தங்களுக்கே உரிய பாணியில் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். சில நெட்டிசன் கள் கூறுகையில், ரயில், பேருந்து என பொது இடங்களில் லேப்டாப்பை வைத்து வேலை பார்ப்பவர்கள் பலரை பார்த்து இருக்கிறோம்.
அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் டிரைவிங் செய்யும் போது இப்படி செய்வது சக வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக அமையும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பெண்ணின் லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள், இதுதான் வொர்க் பிரம் கார் என்று கலாய்த்தும் பதிவிட்டு இருக்கிறார்கள்.
-
பெங்களூரில் 1 BHK-க்கு 40 ஆயிரம் வாடகை.. ஐடி பெண் ஊழியர் எடுத்த விசித்திர முடிவு.. பெரும் விவாதம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications