வாகனங்களுக்கு புதிய நம்பர் பிளேட்கள் கட்டாயம்! பணத்தை இழந்து விடாதீங்க.. பெங்களூர் போலீசார் வார்னிங்
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களில் HSRP நம்பர் பிளேட்கள் பொருத்துவது கட்டாயம் என்று அம்மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே வாகன ஓட்டிகள் சிலர் இந்த புதிய வகை நம்பர் பிளேட்களை புக்கிங் செய்ய தவறான இணையதளங்களில் ஸ்கேன் செய்து பணத்தை பறிகொடுப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த நகரமாக பெங்களூர் தான் உள்ளது. டிராபிக் அதிகம் உள்ள நகரங்களில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் பெங்களூரில் இந்தியாவில் வேறு எந்த நகரத்திலும் இல்லாத வகையில் தனிநபர் வாகன பயன்பாடு உள்ளது. பெங்களூர் சாலைகளில் பீக் நேரங்களில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கார்கள் அணி வகுத்து நிற்பதை காண முடியும்.

வாகன திருட்டு, போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், அதை மட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கர்நாடக மாநில போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான், வாகனங்களின் நம்பர் பிளேட்களில் மாற்றங்களை புதிய பாதுகாப்பு வசதியை கொண்டு வந்த கர்நாடக போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் HSRP உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் இந்த வகை நம்பர் பிளேட்கள் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதும், அலுமினியத்தால் ஆன இந்த நம்பர் பிளேட்களில் வாகன எண்கள் ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டு இருக்காது. மாறாக பொறிக்கப்பட்டு இருக்கும்.
இந்த நம்பர் பிளேட்களை வாகனங்களில் இருந்து அகற்ற முடியாது. இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளை கொண்ட இந்த நம்பர் பிளேட்களை 2019 க்கு முந்தைய வாகனங்களில் பொருத்துவது கட்டாயம் என்று கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் மே மாதத்திற்குள் வாகன ஓட்டிகள் இந்த வகை நம்பர் பிளேட்களை பொருத்தவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், HSRP நம்பர் பிளேட்களை பெறுவதற்கு பதிவு செய்வதில் சில முறைகேடுகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது போலி இணையதளங்களில் வாகன ஓட்டிகள் புக்கிங் செய்ய முயன்று பணத்தை பறிகொடுப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், பெங்களூர் நகர போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில், வாகனத்தில் #HSRP நம்பர் பிளேட் பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் மூலம் மட்டுமே வாகனத்தின் #HSRP நம்பர் பிளேட்டை முன்பதிவு செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications