‛சூர்யவம்சம்’ பட ரியல் ஹீரோ! 400 காருக்கு ஓனரான பெங்களூர் சலூன் கடைக்காரர்! யார் இந்த ரமேஷ் பாபு?
பெங்களூர்: இந்தியாவில் உலக பணக்காரர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளவர்களை விட அதிகமாக அதாவது 400 கார்களுக்கு உரிமையாளராக சலூன் கடைக்காரர் ஒருவர் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. இது முற்றிலும் உண்மை. யார் அந்த சலூன் கடைக்காரர். வாங்க பார்க்கலாம்.
‛சூர்யவம்சம்'.. தமிழ் சினிமாவில் இன்று வரை மறக்க முடியாத திரைப்படமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார், நடிகை தேவையானியை திருமணம் செய்த பிறகு கையில் பணம் ஏதுமின்றி கஷ்டப்படுவார்.

வீட்டுக்கு வரும் தனது அப்பாவுக்கு சுடச்சுட உணவு பரிமாற பணம் இல்லாத சூழலில் இட்லி உப்புமா தயாரித்து கொடுப்பார் தேவையானி. அதன்பிறகு தேவையானி கொடுக்கும் உத்வேகத்தில் சரத்குமார் பழைய பஸ்சை வாங்கி வாழ்க்கையில் முன்னேறி கோடீஸ்வரராவார். இந்த குறிப்பிட்ட காட்சி அனைவருக்கும் பேவரைட் ஒன்றாக இருக்கிறது.
அதோடு இன்றும் கூட பலரும் ‛‛நம் வாழ்க்கை சூர்யவம்சம் சரத்குமார் மாதிரி இருக்கு.. எப்போது தேவையானி வந்து நாம எப்போ பஸ் கம்பெனி ஆரம்பிக்கிறது'' என கூறுவது போன்ற மீம்களை வலைதளங்களில் பார்க்க முடிகிறது. மேலும் இப்படியொரு சம்பவம் வாழ்க்கையில் நடந்து விடாதா? என ஏங்கி வரும் சூழலில் தான் ‛சூர்யவம்சம்' படத்தின் ஹீரோ போன்று வாழ்க்கையில் ஒன்று இல்லாமல் பசி, பட்டினியால் வாடிய ஒருவர் தற்போது 400 கார்களுக்கு ஓனர் ஆகி உள்ளார்.
அவர் யார் என்றால் ரமேஷ் பாபு. கர்நாடகா தலைநகரான பெங்களூரை சேர்ந்தவர். இவர் பிறக்கும் போதே சில்வர் ஸ்பூனுடன் பிறக்கவில்லை. இவரது வாழ்க்கை மிகவும் ஏழ்மை நிலையில் தான் தொடங்கியது. இன்னும் சொல்லப்போனால் பசி, பட்டினியுடன் தான் வாழ்க்கை தொடங்கியது. அதாவது ரமேஷ் பாபுவின் தந்தை பெயர் கோபால். இவர் பெங்களூர் பிரிகேட் ரோட்டில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒருவர் தான் ரமேஷ் பாபு.
இந்நிலையில் தான் திடீரென கோபால் மரணமடைந்தனர். அப்போது ரமேஷ் பாபுவின் வயது வெறும் 7 தான். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகள் அனைவரும் சிறுவர்கள் என்பதால் வருமானம் இல்லை. இதையடுத்து கோபால் நடத்தி வந்த சலூன் கடையை தினமும் ரூ.5 வாடகைக்கு விட்டனர். இருப்பினும் அவர்களின் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அது போதுமானதாக இல்லை.
இதனால் ரமேஷ் பாபு சிறுவயதிலேயே வேலை செய்ய தொடங்கினார். வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால்பாக்கெட் போடுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்து சம்பாதிக்க தொடங்கினார். இதனால் கிடைத்த வருமானம் மூலம் அவர்களின் குடும்பம் பசியாற ஆரம்பித்தது. ஆனாலும் பல நாட்கள் அவர்களின் குடும்பம் பட்டினியை எதிர்கொண்டது.
அதேவேளையில் அவர் கல்வியையும் விட்டு விடவில்லை. தொடர்ந்து பள்ளியும் சென்றார். இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக அவரால் 10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இதனால் அவர் முடித்திருத்தும் தொழில் கற்றார்.
அதன்பிறகு 1990 காலக்கட்டத்தில் அவர் தனது தந்தை விட்டு சென்ற சலூன் கடையை ஆரம்பித்தார். இதில் அவருக்கு வருமானம் வர தொடங்கியது.
இதையடுத்து அவர் வாடகைக்கு கார் வழங்கி சம்பாதிக்க திட்டமிட்டார். பெங்களூர் போன்ற நகரங்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். இதனால் வாடகை கார் தொழில் கைக்கொடுக்கும் என அவர் நம்பினார். இதையடுத்து ரமேஷ் பாபு பழைய மாருதி ஆம்னி காரை வாங்கினார். இதனை வாங்க அவரிடம் போதிய அளவு பணம் இல்லை. இருப்பினும் அவர் தனது உறவினர் உதவியுடன் இந்த காரை வாங்கினார். அதன்பிறகு அந்த காரை வாடகைக்கு வழங்கினார். இதில் நல்ல வருமானம் கிடைத்தது. இதையடுத்து அடுத்தடுத்து கார்கள் வாங்க தொடங்கினர்.
அதன்பிறகு ரமேஷ் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தொழில் தொடங்கினார். இதையடுத்து சாதாரண கார்களுக்கு பதில் சொகுசு கார்கள் வாங்க ஆரம்பிதத்தார். முதல் சொகுசு காராக மெர்சிடஸ் ஈ க்ளாஸ் செடன் மாடல் காரை ரூ.75 லட்சத்திற்கு வாங்கினார். அவருடைய தொழில் வளர வளர, அவரிடம் இருந்த சொகுசு கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. டிராவல்ஸ் மற்றும் சலூன் கடையை ஒருசேர கவனித்து வந்தார்.
இந்த அயராத உழைப்பால் அவரது வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போனது. அவரது வருமானம் பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது. சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல பிரபலங்கள் அவரிடம் இருந்து காரை வாடகைக்கு பெற்று பயன்படுத்த தொடங்கினர். நடிகர் அமிதாப் பச்சன், அமீர் கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் அவரின் வாடிக்கையாளர்களாக மாறிப்போயினர்.
இதனால் டிராவல்ஸ் தொழிலில் அவர் கொடிக்கட்டி பறக்க தொடங்கினார். தற்போது அவரது சொத்து மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் 400க்கும் அதிகமான கார்கள் உள்ளன. இதில் பல சொகுசு கார்களும் அடங்கும். அதன்படி பார்த்தால் ரூ.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸின் கோஸ்ட் மாடல் கார், ரூ.2.6 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் மேபேக் எஸ்600, உள்பபட பிஎம்டபிள்யூ, ஜாகுவார், பெண்ட்லி சீடன் என பல சொகுசு கார்களை ரமேஷ் பாபு வைத்துள்ளார்.
இவருக்கு சென்னை, மும்பை, பெங்களூரில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தில் தற்போது 300க்கும் அதிகமானவர்கள் பணி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications