பெங்களூர் சர்ஜாபுரா சாலையில் மாற்றுப்பாதை.. விப்ரோ ஏற்றால் ஐடி ஊழியர்களுக்கு பெரிய குட் நியூஸ்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள சர்ஜாபுரா வெளிப்புறச் சுற்றுவட்டச் சாலையில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விப்ரோவின் தொழில்நுட்ப வளாகத்தின் வழியாக வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விப்ரோ நிறுவனத் தலைவர் ரிஷத் பிரேம்ஜியிடம் கோரிக்கை வைத்தார். உண்மையில் இந்த கோரிக்கையை மட்டும் விப்ரோ ஏற்றால், பெங்களூர் ஐடி மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம் ஆக இருக்கும்.. கடுமையான நெரிசல் அப்படியே பாதியாக குறைந்துவிடும்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவன தலைவர் ஆசிம் பிரேம்ஜிக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், கர்நாடகத்தில் ஐடி துறையின் வளர்ச்சி மற்றும் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வரும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பெங்களூர் இப்லூர் சந்திப்பில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வருவது பெரும் சவாலாக இருக்கிறது. இது வாகன போக்குவரத்து, உற்பத்தி மற்றும் மக்களின் தரமான வாழ்க்கை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

30 சதவீதம் நெரிசல் குறையும்
இதன் காரணமாக விப்ரோ நிறுவன வளாகத்திற்குள் வாகன போக்குவரத்தை அனுமதிக்க நான் விரும்புகிறேன். அதேநேரம் இது இருதரப்பு பரஸ்பர ஒப்புதலுக்கு உட்பட்டது. இவ்வாறு அனுமதித்தால் புறவழிச்சாலை (ஓ.ஆர்.ஆர்.) மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் 30 சதவீதம் வரை வாகன நெரிசல் குறையும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் உங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது.
சித்தராமையா வேண்டுகோள்
வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுவது தடுக்கப்படும். பெங்களூர் நகரம் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதியாக மாற்றுவதில் உங்களின் உதவி தேவையாகும். அதனால் உங்கள் நிறுவன அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து முடிந்தவரை விரைவாக பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்பு திட்டத்தை வகுத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்" இவ்வாறு சித்தராமையா கூறியிருந்தார்.
சர்ஜாபுரா சாலையில் உள்ள சிக்கல்
முதல்வர் சித்தராமையாவே இந்த விஷயத்தில் கடிதம் எழுதுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. ஏனெனில் பெங்களூருவின் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ள சர்ஜாபுரா சாலை, குறுகலாகவும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதற்குப் போதுமான வசதிகள் கிடையாது. எனவே அங்கு எப்போதுமே நெரிசல் மிக அதிகமாக உள்ளது. அதேபோல் அங்கு மாற்றுப்பாதை இல்லை. இந்தப் பகுதியில் வாகனங்கள் எளிதாகச் செல்ல மாற்றுப் பாதைகள் எதுவுமே இல்லை. இதனால் அனைத்து வாகனங்களும் ஒரே சாலையில் செல்ல வேண்டியிருக்கிறது.
புதிய மாற்றுப்பாதை
அந்த சாலையில் அமைந்துள்ள விப்ரோ வளாகம் மிகவும் பெரியது ஆகும். அதன் வழியாக ஒரு மாற்றுப் பாதையை அமைத்தால், அது சர்ஜாபுரா சாலையின் நெரிசலைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆகவேதான் விப்ரோ வளாகத்திற்குள் போக்குவரத்தை அனுமதிக்க கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் சித்தராமையா.. இந்த கோரிக்கையை ஏற்று புதிய மாற்றுப்பாதை உருவானால் பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு, அந்த சாலை மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications