பெங்களூரில் அமையும் 2வது விமான நிலையம்.. வந்த முக்கிய அறிவிப்பு.. அப்போ ஓசூர் ஏர்போர்ட் என்னவாகும்?
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட்டை இன்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். அதில் பெங்களூர் உட்கட்டமைப்பு சார்ந்து பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாகப் பெங்களூரில் அமையும் 2வது விமான நிலையம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநில பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் பெங்களூர் உட்கட்டமைப்பு சார்ந்த பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. கர்நாடக மாநிலத்தின் விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் பெங்களூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது குறித்து முதல்வர் சித்தராமையா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஏழு ஏர்போர்ட்கள்
மாநிலத்தின் ஏழு உள்நாட்டு விமான நிலையங்களின் வளர்ச்சிக்கு நடப்பு ஆண்டில் ₹200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கூடுதலாக, இந்த ஏழு விமான நிலையங்களுக்கான மேம்பாட்டு மானியமாக இதுவரை ₹1,593 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். பல்வேறு விமான நிலையப் பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில் மேலும் ₹500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சித்தராமையா அறிவித்தார். அதேநேரம் 2026 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டிலும் இந்தத் திட்டத்திற்கு ₹500 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
பெங்களூர் 2வது ஏர்போர்ட்
நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ள பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதற்காக, பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறினார். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தொழில்நுட்ப ஆலோசனை பெற்ற பிறகு தயாரிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார். தமிழ்நாட்டின் ஓசூரில் விமான நிலையம் அமைக்கத் தமிழக அரசு முயன்று வரும் சூழலில், பெங்களூரில் 2வது ஏர்போர்ட் வந்தால், அது தமிழக அரசின் ஏர்போர்ட் முயற்சிகளைப் பாதிக்கும்
PPP எனப்படும் பொது-தனியார் பங்களிப்பு முறையில் சில புதிய திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார். அதன்படி, விஜயபுரா விமான நிலைய வளாகத்தில் விமானப் பயிற்சிப் பள்ளி ஒன்றும், சிவமொக்கா விமான நிலைய வளாகத்தில் விமான உற்பத்தி மற்றும் அசெம்பிளி யூனிட்களும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
சிவமொக்கா ஏர்போர்ட்
அவர் மேலும், "சிவமொக்கா அருகில் உள்ள சொகானே கிராமத்தில் 775 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2023 பிப்ரவரியில் சிவமொக்கா விமான நிலையம் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையம் தற்போது பெங்களூர், ஐதராபாத், சென்னை, கோவா மற்றும் திருப்பதி நகரங்களுக்கு விமானச் சேவைகளை இயக்கி வருகிறது. இங்கு இரவு நேரத் தரையிறங்கும் வசதியை ஏற்படுத்தத் தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெங்களூர்
பெங்களூரில் உள்ள KIADB ஏரோஸ்பேஸ் பூங்காவில் ₹30 கோடி மொத்த திட்டச் செலவில் ஒரு விண்வெளி மையம் அமைக்கப்படவுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதற்காக ₹10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மைசூரில் விண்வெளித் தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க, KIADB நிறுவனம் மைசூர் விமான நிலையத்திற்கு அருகில் ஏரோஸ்பேஸ் பூங்காவை உருவாக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
ஹெசரகட்டா ஏரியில் கயாகிங் மற்றும் கேனோயிங் போன்ற நீர் சாகச விளையாட்டுகளுக்கு உயர்தர சிறப்புப் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் சைக்கிள் ஓட்டும் திறனை மேம்படுத்தவும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும், மைசூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சைக்கிள் வெலோட்ரோம் ஒன்று கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் களைய, ரோஹித் வெமுலா சட்டம் (பட்டியல் சாதிகள்/பழங்குடியினர் மீதான பாகுபாட்டில் இருந்து பாதுகாப்புச் சட்டம்) அமல்படுத்தப்படவுள்ளது. அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனங்களிலும் இது அமல்படுத்தப்படும் என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications