மாசம் 3 லட்சம் மிச்சம்.. என்ன பண்ணனும்னு தெரியல? ஐடியா கேட்ட ஐடி தம்பதி.. கொதித்த நெட்டிசன்ஸ்
பெங்களூர்: மாதம் மாதம் ரூ.3 லட்சம் மிச்சம் வருகிறது, இதனை எப்படி செலவு செய்வது என்று தெரியவில்லை. எனவே இந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று யாராவது ஐடியா கொடுங்கள் என்று பெங்களூர் தம்பதியினர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரல் ஹிட் அடிக்கின்றது. நெட்டிசன்களும் காரசாரமாக கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு பல லட்சங்களில் சம்பளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொட்டி கொடுக்கின்றன. இதனால், ஐடி துறையில் வேலை செய்ய இளைஞர்கள் மத்தியில் எப்போதும் தனி ஆர்வம் உள்ளது.

ஆனால், ஆறு இலக்கங்களில் சம்பளத்தை வாங்கினாலும் மாத கடைசியில் எதுவும் மிச்சம் இல்லை என ஐடியில் பணியாற்றுபவர்கள் நண்பர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.. ஆனால், பெங்களூரை சேர்ந்த ஒரு தம்பதி வித்தியாசமான ஆலோசனையை கேட்டு இருக்கிறார்கள். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பெங்களூர் தம்பதி: இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. இங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒரு தம்பதிக்கு பணத்தை என்ன செய்வது என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளதாம்.. இது குறித்து, சம்பளம், பணி சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கும் பிரபல சமூக வலைதளமான கிரேப்வின் என்ற செயலியில் இந்த பெங்களூர் ஐடி தம்பதி போட்ட ஒரு பதிவுதான் நெட்டிசன்களை தலை சுற்ற வைத்து இருக்கிறது.
மாதம் ரூ.3 லட்சம் மிச்சம்: அதாவது, அந்த ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றும் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து மாதம் 7 லட்சம் சம்பாதிக்கிறார்களாம். வீட்டு செலவு, தங்களுக்கு தேவையான செலவுகள், கார்களுக்கான பராமரிப்பு செலவு என அனைத்து செலவுகளும் போக மீதம் 3 லட்ச ரூபாய் இருக்கிறதாம். இதில் என்ன பிரச்சினை என நினைக்காதீர்கள்.. பிரச்சினையே இதுதானாம்..
இந்த 3 லட்ச ரூபாயை என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை தாருங்கள் என பதிவிட்டு இருக்கிறார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அந்த தம்பதியின் கணவர். மீயூட்சுவல் பண்டில் 2 லட்சம் முதலீடு செய்துள்ளாராம்.. மாதத்திற்கு அவர்களுக்கு வாழ்க்கை செலவாக ரூ.1.5 லட்சம் ஆகிறதாம்.. சொந்தமாக காரும் உள்ள நிலையில், இவை அனைத்திற்கு பிறகும் ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் 3 லட்சம் மிச்சமாக உள்ளது.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்: எனவே இதை எப்படி செலவு செய்வது என ஆலோசனை தாருங்கள் என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு போட்ட சில மணி நேரங்களில் கமெண்டுகளை கொட்டி தீர்த்து விட்டனர் நெட்டிசன்கள். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல தங்களுக்கே உரிய பாணியில் நெட்டிசன்கள் காமெடியாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், மிச்சம் இருக்கும் பணத்தை அப்படியே எனக்கு கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார்.
என்னை தத்து எடுங்கள்: அதேபோல மற்றொரு நெட்டிசனோ ஒரு படி மேலே போய், என்னை ஏன் நீங்கள் தத்தெடுத்து கொள்ளக் கூடாது என்று கேட்டுள்ளார். சில நெட்டிசன்கள் பயனுள்ள சில பரிந்துரைகளையும் கொடுக்காமல் இல்லை, "அறக்கட்டளையில் அதிகம் முதலீடு செய்யுங்கள்.. அல்லது உதவி செய்யுங்கள்.. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம்" என பல ஐடியாக்களை கூறியுள்ளார்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications