"ஊரா இது.! பெங்களூர் போலீஸ் சுத்த வேஸ்ட்! டிராபிக் ரொம்பவே மோசம்!" பிரபல தேசிய அரசியல் தலைவர் தாக்கு
பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் டிராபிக் பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கிடையே பெங்களூரின் டிராபிக்கை கடுமையாகச் சாடியுள்ள சமாஜ்வாடி எம்பி ராஜீவ் ராய், பெங்களூர் டிராபிக் போலீசாரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சமூக வலைத்தளங்களை எடுத்துப் பார்த்தாலே காலை முதல் இரவு வரையிலும் கூட பெங்களூர் டிராபிக் குறித்தே பெங்களூர்வாசிகள் புலம்பித் தள்ளி இருப்பார்கள். இந்த அதீத டிராபிக், பெங்களூரில் பலரது பயணத் திட்டங்களைச் சீர்குலைத்துள்ளது.

டிராபிக்கில் சிக்கிய எம்பி
இந்த முறை பெங்களூர் டிராபிக்கில் சிக்கியவர் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் ராய். உத்தரப் பிரதேச மாநிலம் கோசி தொகுதியின் எம்பியான இவர் சமீபத்தில் பெங்களூர் வந்திருந்தார். இன்று டெல்லியில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், பெங்களூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல ராஜீவ் ராய் திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், பெங்களூர் டிராபிக்கால் அவரால் விமான நிலையத்திற்கே செல்ல முடியவில்லை. பெங்களூர் சாலைகளிலேயே மணிக்கணக்கில் சிக்கினார். விமானத்தைப் பிடிக்க முடியாது என அஞ்சிய அவர், உதவிக்காக பெங்களூர் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். இருப்பினும், யாரும் தனது காலுக்கு பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நகரில் டிராபிக் இந்தளவுக்கு மோசமாக இருந்தாலும் அதை முறைப்படுத்த டிராபிக் போலீஸ் ஒருவர் கூட சாலையில் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கடும் விமர்சனம்
இதனால் அதிருப்தி அடைந்த ராய், சமூக வலைத்தளத்தில் பெங்களூர் டிராபிக்கை கடுமையாகச் சாடியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விமர்சித்த ராய், பெங்களூரில் டிராபிக் மோசமாக இருப்பதாகவும் இங்குள்ள டிராபிக் போலீசார் பொறுப்பே இல்லாமல் இருப்பதாகவும் சாடினார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கர்நாடக முதல்வரே, மன்னிக்கவும், உங்கள் நகரின் போக்குவரத்து மேலாண்மை மிகவும் மோசமாக உள்ளது. போக்குவரத்து காவலர்கள் பொறுப்பே இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் செல்போன் அழைப்புகளைக் கூட எடுப்பதில்லை. நான் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததற்கான ஸ்கிரீன்ஷாட் இதோ.. யாருமே கடைசி வரை என் அழைப்பை எடுக்கவில்லை.

காவலர்களே இல்லை
கடந்த ஒரு மணி நேரமாகவே ராஜ்குமார் சமாதி சாலையில் சிக்கியுள்ளோம். நாளை நான் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், விமானத்தை விட்டுவிடுவேன் என்றே நினைக்கிறேன். டிராபிக் இவ்வளவு மோசமாக இருந்தாலும் டிராபிக் காவலர் ஒருவர் கூட இங்கு இல்லை.. இந்த திறமையற்ற அதிகாரிகள் இந்த அழகான நகரத்தின் பெயரைக் கெடுக்கிறார்கள். பெங்களூர் மிகவும் மோசமான டிராபிக் நெரிசலைக் கொண்ட நகரம் என்பதில் சந்தேகம் வேண்டாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உலகிலேயே மிக மோசமான டிராபிக்கை கொண்ட நகரங்களில் ஒன்றாக பெங்களூர் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது பெங்களூர் டிராபிக் நெரிசலைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை எடுப்போம் என எல்லாக் கட்சிகளும் சொல்கிறார்கள். இருப்பினும், டிராபிக் நெரிசல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் விண்வெளி சென்று திரும்பிய சுப்ஷான்ஷு சுக்லா கூட பெங்களூர் டிராபிக்கை பற்றிப் பேசியிருந்தார். பெங்களூர் டிராபிக் நெரிசலைச் சமாளிப்பதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிதானது என்று அவர் கூறியிருந்தார்..
புதிய திட்டம்
இதற்கிடையே பெங்களூர் நகரின் டிராபிக்கை சரி செய்ய ₹19,000 கோடி மதிப்பீட்டில் ஒரு பெரிய சுரங்கப்பாதை நெட்வொர்க்கை துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் முன்மொழிந்தார். இருப்பினும் விஞ்ஞானிகள், நகர திட்டமிடல் வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தத் திட்டத்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications