மொத்தமாக மாற போகும் பெங்களூர்.. 73 கிமீ பிஸ்னஸ் காரிடார்.. இனி டிராபிக் சிக்கலே இருக்காது!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை யாரும் தனியாகச் சொல்லத் தேவையில்லை. டிராபிக் நெரிசலைக் குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகப் பெங்களூரில் 73 கிமீ பெங்களூர் பிஸ்னஸ் காரிடார் அமைக்கப்படும் நிலையில், இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா வெளியிட்ட அறிவிப்புகளை நாம் பார்க்கலாம்!
பெங்களூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள டிராபிக் தான். ஒவ்வொரு நாளும் பெங்களூர் மக்கள் தங்களின் கணிசமான நேரத்தை டிராபிக் நெரிசலிலேயே செலவிடுகிறார்கள். இதற்கிடையே பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏதுவாக கர்நாடக அரசு தனது பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

கர்நாடக பட்ஜெட்
இன்றைய தினம் அம்மாநில முதல்வர் சித்தராமையா பட்ஜெட் உரையை வாசித்தார். காலை 10.15 மணிக்கு அவர் கர்நாடக சட்டசபையில் தனது பட்ஜெட் உரையை வாசித்தார். அதில் மாநிலத்திற்கு பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாகப் பெங்களூர் சார்ந்தும் பல முக்கிய அறிவிப்புகளை சித்தராமையா வெளியிட்டார்.
பெங்களூர் டிராபிக்
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 73 கி.மீ நீளப் பெங்களூர் பிஸ்னஸ் காரிடார் (கட்டம் - 1) அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.. தும்கூர் சாலை முதல் ஓசூர் சாலை வரையிலான இந்தத் திட்டத்திற்கு விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது. இச்சாலையை நான்கு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹெப்பல் சந்திப்பு
ஹெப்பல் சந்திப்பில் இருந்து எச்எஸ்ஆர் லேஅவுட் சில்க் போர்டு வரையிலான வடக்கு- தெற்கு காரிடார் மற்றும் கேஆர். புரம் முதல் மைசூர் சாலை வரையிலான கிழக்கு-மேற்கு காரிடார் என மொத்தம் 40 கி.மீ சுரங்கப்பாதை சாலைகள், 40,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, 17 கி.மீ நீளமுள்ள வடக்கு-தெற்கு காரிடார் திட்டத்திற்கான ரூ.17,780 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
ஹெப்பல் சந்திப்பில் இருந்து மேக்ரி சர்க்கிள் வரை சுரங்கப்பாதை சாலையும், மேம்பாலச் சாலையும் ரூ.2,250 கோடி செலவில் அமைக்கப்படும். பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நெலமங்களா- பிடாடி இடைநிலை ரிங் சாலை, BMRDA மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும்.
முதலமைச்சரின் அம்ரித் நாகரோத்தானா
முதலமைச்சரின் அம்ரித் நாகரோத்தானா (நகராட்சி) திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், ரூ.3,885 கோடி செலவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை மாநில அரசு இதற்காக ரூ.1,716 கோடியை செலவிட்டுள்ளது.. நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.500 கோடி வழங்கப்படும்.
நகரங்களின் தூய்மையைப் பேணும் வகையில் நெலமங்களா, தேவனஹள்ளி மற்றும் மைசூரின் சில பகுதிகளில் நிலத்தடி வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், கேகேஆர் டிபி மைக்ரோ மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் சித்தப்பூர், யாத்கிரி உள்ளிட்ட நகரங்களிலும் இந்த UGD பணிகள் செயல்படுத்தப்படும். மகாத்மா காந்தி நகர் விகாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ், 2026-27 நிதியாண்டில் புதிதாக மேம்படுத்தப்பட்ட ராய்ச்சூர், பீதர், ஹாசன் ஆகிய நகர் கழகங்களுக்கு தலா ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications