திணறடிக்கும் பெங்களூர் டிராபிக்.. இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இப்போ பிரச்சனை இல்லாமல் பறக்கறாரு
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க ஷ்ரவிகா ஜெயின் என்ற பெண் வினோதமான ஒரு யுக்தியைப் பயன்படுத்துகிறார். அதாவது அவர் வெறும் 23 நிமிடம் சீக்கிரம் செல்ல கிட்டத்தட்ட 2 மடங்கு அதிக தொலைவு இருக்கும் சாலையில் செல்கிறாராம். இது தொடர்பாக அவர் சொல்லும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. டிராபிக் நெரிசலைக் குறைக்க பெங்களூர்வாசிகள் பல்வேறு யுக்தியைக் கையாள்வார்கள். அப்படி அங்கு வசிக்கும் இளம்பெண் ஒருவர் பாலோ செய்யும் டெக்னிக் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பெங்களூர் டிராபிக்
பெங்களூர் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கத் தான் என்ன செய்கிறேன் என்பது குறித்த தகவல்களை ஷ்ரவிகா ஜெயின் என்ற பெண் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது "என் வழக்கமான பெங்களூர் நாள்' என பதிவிட்டு அவர் இந்த போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். டிராபிக்கை தவிர்க்க அவர் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தூரம் வாகனத்தை ஓட்டுகிறாராம். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது அந்த பெண் செல்ல வேண்டிய இடத்திற்கு நேராகச் செல்ல 23 கிமீ மட்டுமே ஆகும். ஆனால், நேர் வழியில் போக வேண்டும் என்றால் சிட்டிக்குள் புகுந்து போக வேண்டும். அதற்கு மேப்பில் 1.35 நிமிடங்கள் காட்டுகிறது. அதிக நேரம் பயணிப்பதைத் தவிர்க்க அவர் அப்போதும் 47 கிமீ சுற்றுப் பாதையைத் தேர்வு செய்வாராம். இது புறநகர் வழியாக அவுட்டர் ரிங் சாலையில் பயணிப்பது. அதிக தூரம் என்றாலும் கூட இந்த வழியாகப் போனால் 1.12 நிமிடங்களில் சென்றுவிட முடிகிறதாம். அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக தூரம் என்றாலும் இந்த ரூட்டையே தேர்வு செய்வேன் என்கிறார்.
அதிக தூரம்
இது தொடர்பாக அவர் மேலும், "பெங்களூர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 23 கி.மீ.க்கு பதிலாக 47 கி.மீ. ரூட்டை தான் நான் தேர்வு செய்வேன். இதுவே எனது வழக்கமான நாள்," எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அதில் அவர் இரண்டு ஸ்கிரீன் ஷாட்களையும் இணைத்துள்ளார். முதல் படத்தில் 23 கி.மீ. பயணத்திற்கு 1 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும் என்பது போல இருக்கிறது. மற்றொரு போட்டோவில் 47 கி.மீ. வழித்தடத்தில் பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 12 நிமிடங்கள் மட்டுமே எனக் கூறப்பட்டுள்ளது..
Took the 47km route instead of 23km to avoid traffic in Bengaluru
— Shravika Jain (@shravi_aj) March 5, 2026
Regular day :) pic.twitter.com/53Y4eaINmU
வேகம்
அதாவது முதல் ரூட்டில் போனால் மாலை 5.43க்கு தான் ரீச் ஆவார். ஆனால், 2வது ரூட்டில் போனால் அவர் 23 நிமிடங்களுக்கு முன்பே, அதாவது மாலை 5:20 மணிக்கே சென்றடைந்தார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே 82,000க்கும் அதிகமான வியூஸ்கள் வந்துள்ளன. மேலும், இது தொடர்பாக தங்கள் கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.
நெட்டிசன்கள்
அதில் ஒருவர், "சிட்டிக்குள் போவதால் தான் ரூட்டில் டிராபிக் அதிகம். பெங்களூர் மட்டுமில்லை.. உலகில் எந்தவொரு நகரமாக இருந்தாலும் கூட சிட்டிக்குள் டிராபிக் அதிகமாகவே இருக்கும்" என பதிவிட்டுள்ளார். இன்னொரு நபர், சுற்றிச் செல்லும் பாதையில் சுங்கச்சாவடி இருக்கிறது. அதைத் தவிர்க்கவே பலரும் இந்த சின்ன ரூட்டில் செல்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இன்னொரு நபர், "இது எமர்ஜென்சி என்றால் ஓகே.. இல்லையென்றால் நேர் வழியே சிறந்தது. வெறும் 23 நிமிடங்கள் முன்கூட்டியே செல்ல கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக தூரம் பயணிக்க வேண்டும். இதனால் எரிபொருள் செலவாகிறது. மேலும், சுற்றிச் செல்லும் ரூட்டில் சீக்கிரம் செல்லலாம் என்ற போதிலும் ரூ.223 சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications