பாத்ரூம் போக தண்ணீர் இல்லாத கொடுமை.. பெங்களூரையே காலி செய்யும் ஐடி ஊழியர்கள்.. கலங்கடிக்கும் பதிவு
பெங்களூர்: பெங்களூரில் கழிப்பறை செல்ல தண்ணீர் இல்லாத காரணத்தால் இளைஞர் ஒருவர் டெல்லிக்கு வீடு மாறுவதாக உருக்கமாக போஸ்ட் செய்துள்ளார்.
கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக பெங்களூரில் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் டேங்கர்கள் விலையை உயர்த்துவதாக அங்கே குடியிருப்பாளர்கள் புகார் கூறுகின்றனர். பெங்களூருவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் டேங்கர் நிறுவனங்களே தண்ணீர் வழங்க முடியாமல் தவிக்க தொடங்கி உள்ளன.
பெங்களூரில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக தன்னார்வலர் ஒருவர் செய்துள்ள போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Citizens Movement, East Bengaluru என்ற பக்கம் செய்துள்ள போஸ்டில், எங்கள் தன்னார்வலர் ஒருவருக்கு ஹர்லூர் பகுதியில் உள்ள ஒரு மாடியில் தங்கியிருந்த ஒருவரிடமிருந்து அவசரமான தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவர், "என் வாழ்நாளில் நான் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்ததில்லை. எனது கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் இன்று நான் கழிப்பறைக்கு செல்லவில்லை. நான் 2BHKக்கு 40 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்துகிறேன், எனக்கு ஒரு வாரமாக தண்ணீர் கிடைக்கவில்லை. காலையில் 30 நிமிடங்களுக்கு தண்ணீர் வந்தபோது, நான் தூங்கியதால் எடுக்க முடியவில்லை.
நான் இரவு ஷிப்ட் வேலை செய்வதால் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. இங்கு சொத்து வாங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது நான் அதை வாங்க மாட்டேன். தண்ணீர் இல்லாத இந்த ரம்மியமான இடத்தில் தங்குவதை விட, என் கிராமத்தில் இருப்பது நல்லது" என்றார்.
விலைவாசி கொடுத்து, தண்ணீர் கூட கிடைக்காமல், தண்ணீரைக் கொண்ட நல்ல இடத்திற்குச் செல்ல மக்கள் திட்டமிடுவது ஒருவகையில் நல்லதுதான்! இருப்பினும், ரியல் எஸ்டேட் வளர்ச்சித் தூண்களில் ஒன்றாக இருக்கும் #BrandBengaluru க்கு இந்த நிலைமை நன்றாக இல்லை! மழைக்காகக் காத்திருக்காமல், நீண்ட கால தீர்வைக் காண தீவிர நடவடிக்கைகளை எடுங்கள், என்று அந்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்டேட்; இப்போது இதே நிர்வாகி பணியை விட்டு விலகுவதாக குறிப்பிட்டு உள்ளார். அவர், நான் டெல்லிக்கு செல்கிறேன். பெங்களூரில் இருக்க முடியாத காரணத்தால் பணி மாறி டெல்லிக்கு செல்கிறேன். இங்கே சமாளிக்க முடியாது. தண்ணீர் இல்லாத இந்த மோசமான சூழ்நிலையில் சமாளிக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.
கோரிக்கை: அதேபோல் அங்கே வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் செய்துள்ள போஸ்ட் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
போஸ்ட்: அதில், எங்கள் குடியிருப்பில் தொடர்ந்து 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகம் செய்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. இப்போது நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் வாழக்கூடிய சூழலை விட மிக மோசமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
பகலில் தண்ணீர் இல்லை, இரவில் கிடைக்கும் போது சேறு கலந்த தண்ணீர் தான் குளிப்பதற்கு கிடைக்கிறது. அது பயன்படுத்த தகுதியற்றது. துவைப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் ஈரமான துடைப்பான்கள் மற்றும் டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்த குடியிருப்பாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பெரும்பாலான மக்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். மற்றவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்குச் சென்றுள்ளனர். கழிவறையில் இருந்து .. மனித மலத்தின் துர்நாற்றத்தை நீங்கள் தொலைதூரத்திலிருந்து கூட உணருவீர்கள். அந்த அளவிற்கு பலரும் தண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளில் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அருகிலுள்ள ஃபோரம் மாலுக்குத்தான் பலரும் கழிப்பறையை பயன்படுத்த செல்கின்றனர். அந்த அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சமையலைப் பற்றி பேசினால், கண்ணீரே வந்துவிடும்.
பாத்திரங்கள் சுத்தம் செய்யப்படாததால் வெளியில் இருந்து ஆர்டர் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. சிலர் ஒரு ஜோடி ஆடைகள் மற்றும் துண்டுகளுடன் ஜிம்மிற்குச் சென்று குளித்துவிட்டு திரும்பி வருகிறார்கள். 1cr+ கொடுத்து வாங்கிய வீட்டுக் கடனுக்காக Emi ஐச் செலுத்தும்போது தாங்க முடியாத அளவுக்கு ஏமாற்றமும் வேதனையும் வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications