நேரில் ரூ.320.. ஆன்லைனில் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகம்.. எல்லை மீறி போகும் ஆன்லைன் டெலிவரி செயலிகள்
பெங்களூர்: இந்தக் காலத்தில் நம்மில் பலரும் உணவுகளை ஆன்லைன் வழியாகவே ஆர்டர் செய்கிறோம். ஆன்லைன் ஆர்டர் தொடர்பாக இணையத்தில் தொடர்ச்சியாக விவாதம் இருந்தே வருகிறது. இதற்கிடையே பெங்களூரை சேர்ந்த பிரபல யூடியூபர் நளினி உனாகர் போட்ட போஸ்ட் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நாம் ஒரு உணவை நேரில் சென்று வாங்கும் விலையைக் காட்டிலும் ஜொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட தளங்களில் அதே உணவை ஆர்டர் செய்யும்போது அதன் விலை அதிகமாக இருக்கும். இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த ரேட் வித்தியாசம் இப்போது மிகப் பெரிய அளவுக்கு அதிகரித்துவிட்டதையே நளினி போட்ட போஸ்ட் காட்டுகிறது.

இரண்டு மடங்கு அதிகம்
அவர் தனது ஊரில் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து உணவை ஆர்டர் செய்துள்ளார். இரண்டு உணவுகளை மட்டுமே அவர் ஆர்டர் செய்த நிலையில், அதற்கு மொத்தக் கட்டணமாக ரூ.655 வந்துள்ளது. ஆனால், உண்மையில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் வெறும் ரூ.320க்கு தான் அந்த உணவுகளை விற்றுள்ளன. அதாவது கிட்டத்தட்ட 2 மடங்கை விடவும் கூட அதிகம். இது தொடர்பான போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
ஷாக்
அதில் வெஜ் மஞ்சூரியனுக்கு ரூ.160ஐ அந்த ஹோட்டல் போட்டுள்ளது. ஆனால், ஜொமேட்டோ தளத்தில் அதற்கு ரூ.310 வசூலிக்கிறார்கள். அதேபோல சைனீஸ் பேல் ரூ.160க்கு பதில் ரூ.290க்கு விற்கப்படுகிறது. டெலிவரி சார்ஜ், பேக்கிங் சார்ஜ் உள்ளிட்ட கட்டணங்களைச் சேர்த்து மொத்தம் ₹320க்கு பதிலாக ₹655 பில் காட்டியது. ஜொமேட்டோ தளத்தில் ஆஃபர்கள் இருந்த போதிலும், அதை அப்ளை செய்தாலும் ₹550 கட்ட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது. ஆஃப் பற்றித் தெரியாதவர்கள் ரூ.655ஐ முழுமையாகவே கட்டி இருப்பார்கள்.
அதாவது அதே உணவு அதே ஹோட்டலில் இருந்து வாங்கிய போதும், நேரில் வாங்குவதை விட ஆன்லைனில் ரேட் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருந்துள்ளது. இந்தளவுக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதை ஏற்கவே முடியாது என நளினி கண்டித்து இருக்கிறார். பில் போட்டோவை பகிர்ந்து நளினி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவரது போஸ்ட் உடனடியாக இணையத்தில் டிரெண்டானது.
ஜொமேட்டோ
இது இதற்கிடையே ஜொமேட்டோ இது குறித்துப் பதிலளித்துள்ளது. வழக்கம் போலவே உணவுகளின் விலையை நிர்ணயம் செய்வது ஹோட்டல்கள் தான் என்றும் தாங்கள் வெறும் இடைத்தரகர்கள் மட்டுமே எனக் கூறியுள்ளது. அவர்கள் மேலும், "எங்கள் தளத்தில் உணவுகளின் விலைகள் சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் தான் தீர்மானிக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கும் உணவகங்களுக்கும் இடையே ஒரு இடைத்தரகராக மட்டுமே ஜொமேட்டோ செயல்படுகிறது. உங்கள் கருத்தைச் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துவோம்" என்று மட்டும் பதிலளித்துள்ளது.
நெட்டிசன்கள் காட்டம்
அவரது போஸ்டும் ஜொமேட்டோவின் இந்த பதிலும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஜொமேட்டோ தளத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினார். உணவகங்கள் விலையை நிர்ணயித்தால், ஜெமேட்டோ வசூலிக்கும் கமிஷன், விளம்பரக் கட்டணம் உள்ளிட்டவை குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று நெட்டிசன் பதிவிட்டார்.
உணவகங்களிடம் இருந்து ஜொமேட்டோ கமிஷனாக அதிக தொகையை வசூலிப்பதாகவும் அதை ஈடு செய்யவே ஹோட்டல்கள் தங்கள் உணவு விலையை ஆன்லைன் ஆர்டருக்கு அதிகரிப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். வெறும் இடைத்தரகர் எனச் சொல்லிக் கொண்டாலும், தனது தளத்தில் இருக்கும் குறைகளை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications