ஓடும் ஆட்டோவில் கீழே குதித்த பெண்.. போதையில் ரூட்டை மாற்றிய டிரைவரால் பெங்களூர் திக்திக் சம்பவம்
பெங்களூர்: பெங்களூரில் நம்ம யாத்ரி செயலி மூலம் பயணியை பிக்அப் செய்த ஆட்டோ டிரைவர் திடீரென்று ரூட்டை மாற்றினார். இதனால் பயந்துபோன அந்த பெண் பயணி டிரைவரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் பொதுமக்கள் வாடகை பைக், வாடகை கார்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு நிறுவனங்கள் இதற்கு என்று பிரத்யேகமாக செயலிகளை உருவாக்கி சேவைகளை வழங்கி வருகின்றன.

அதில் ஒன்று தான் ‛நம்ம யாத்ரி'. இந்த ‛நம்ம யாத்ரி' செயலியை பலரும் பெங்களூரில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஆட்டோ, கார்களை முன்பதிவு செய்து மக்கள் பயணித்து வருகின்றனர்.
அந்த வகையில் ‛நம்ம யாத்ரி' செயலி மூலம் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் ஆட்டோவை முன்பதிவு செய்துள்ளார். ஆட்டோ டிரைவர் அந்த பெண் இருக்கும் இடத்துக்கு சென்று அவரை பிக்அப் செய்துள்ளார். ஆனால் அந்த பெண் கூறிய இடத்துக்கு ஆட்டோ டிரைவர் அழைத்து செல்லவில்லை. மாறாக இடையில் ரூட்டை மாற்றி உள்ளார்.
மேலும் அந்த ஆட்டோ டிரைவர் மதுபான போதையில் இருந்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ நம்ம யாத்ரி ஆட்டோ பிரச்சனை. எனது மனைவி பெங்களூர் ஹொரமாவில் இருந்து தனிச்சந்தரிாவுக்கு ஆட்டோவில் பயணம் மேற்கொண்டார். அப்போது டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளதோடு, எனது மனைவியை ஹெப்பால் அருகே தவறான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். ரூட் மாறியதால் நிறுத்தும்படி கூறியும் ஆட்டோ நிற்கவில்லை. இதனால் ஓடும் ஆட்டோவில் இருந்து அவர் கீழே குதித்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பெங்களூர் நகர போலீசார் உடனடியாக அவரை அந்த பதிவில் தொடர்பு கொண்டு தொடர்பு எண் மற்றும் ஆட்டோ விபரங்களை கேட்டனர். இதுபற்றிய விபரங்களை பெற்றுள்ள போலீசார் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். அதேபோல் சம்பந்தப்பட்ட நம்ம யாத்ரி நிறுவனம் உடனடியாக அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டுள்ளது.
இதுதொடர்பாக நம்ம யாத்ரி நிறுவனம் சார்பில், ‛‛எங்களிடம் போனில் பேசிதயற்கு நன்றி. இதுதொடர்பாக விசாரித்து டிரைவரின் கணக்கை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுப்போம். ஏதாவது உதவி வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்'' என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications