Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஃஎப் பணம் எடுப்பதில் இப்படியும் சிக்கல்.. துபாயில் வாழும் பெங்களூர் தொழில் அதிபர் பதிவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பிஃஎப் கணக்கில் பணம் எடுக்க தனியாக பயிற்சியே எடுக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது.சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்காமல் பலர் அவதிப்படுகிறார்கள். உதாரணமாக பெங்களூரைச் சேர்ந்த இளைஞருக்கு பெயர் மாறி இருந்ததால் பணம் எடுக்க முடியவில்லை.. பெயர் மாற்ற கோரிக்கையும் பல நாட்களாக நிலுவையில் இருக்கிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் 2040க்குள் என் பணம் எனக்கு கிடைக்கும் என நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பிஃஎப் கணக்கில் அட்வான்ஸ் எடுக்க வேண்டும் என்றாலோ அல்லது பழைய பிஃஎப் கணக்கில் இருந்து புதிய பிஃஎப் கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டும் என்றாலே உடனே சாத்தியம் இல்லை.. அதற்கு சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பிஃஎப் கணக்கில் பணம் போடுவது மிக எளிது. வேலைக்கு சேரும் நிறுவனங்கள் எளிதாக பணத்தை போட்டுவிடுவார்கள்.

epfo pf money

ஆனால் அதனை ஏதாவது ஒரு அவசர தேவைக்கு எடுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக நிறைய விதிமுறைகள், பெயர் சரியாக இருக்க வேண்டும். பான் கார்டில் உள்ள பெயரும் ஆதார் கார்டில் உள்ள பெயரும் சரியாக இருக்க வேண்டும். கண்டிப்பாக பான் கார்டில் பெயரை மாற்ற முடியாது. ஆதாரில் தான் மாற்ற வேண்டும். அதாவது உங்கள் பெயர் பிஃஎப் கணக்கில் என்ன பெயர் மற்றும் இன்சிலுடன் இருக்கிறதோ அதேபோல் தான் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு என எல்லாவற்றிலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை எடுக்க முடியாது.

பெயரில் சிக்கல் இருந்தால், பெயர் மாற்ற கோரிக்கையை பிஃஎப் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் உங்கள் பெயர் மாற்ற கோரிக்கை ஏற்றுக்கொண்டு உங்கள் பெயரை மாற்ற அனுமதிப்பார்கள். ஆனால் இதில் சிக்கலும் சில நேரங்களில் எழுகிறது. ஏதாவது ஒரு காரணத்திற்காக பெயர் மாற்ற கோரிக்கையை பிஃஎப் அலுவலகம் நிலுவையிலேயே வைத்திருக்கும். அதேபோல் உங்கள் பழைய பிஃஎப் கணக்கில் இருந்து புதிய பிஃஎப் கணக்கிற்கு கையோடு அனைத்து பணத்தையும் மாற்றினால் தான் பிஃஎப் அட்வான்ஸ் எடுக்க முடியும்.

அதேபோல் ஒரே கணக்கில் அனைத்து பணமும் இருந்தால் மட்டுமே பிஃஎப் கணக்கில் மொத்த பணத்தையும் எடுக்க முடியும். அதற்கும் சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கையும் உடனே நிறைவேறாது. ஒரு மாதமாவது காத்திருக்க வேண்டிய நிலை வரும். இதேபோல் ஆதார் ஓடிபி தொடங்கி பிஃஎப் கணக்கில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன் காரணமாக பலருக்கும் இதில் பணம் எடுக்க தெரியாது. ஏன் நன்கு படித்தவர்களுக்கே இதில் பணம் எடுப்பதற்குள் தவித்து போவார்கள். அந்த அளவிற்கு தான் நிலைமை உள்ளது.

இந்நிலையில் பிஃஎப் கணக்கில் பெயர் மாற்ற கோரிக்கை ஒன்றுக்காக பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீஜன் ஷெட்டி என்பவர் அவதிப்பட்டு வருகிறார்.. துபாயில் சிறந்த தொழில் முனைவோர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்ரீஜன் தனது முந்தைய நிறுவனத்தில் உள்ள பிஃஎப் பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.. இவரது பெயர் "ஷெட்டி ஸ்ரீஜான் ஆ என்று இபிஃஎப்ஓ அலுவலக பதிவில் உள்ளது. ஆனால் இவரது பெயர் மற்ற எல்லா ஆவணங்களிலும் ஸ்ரீஜன் ஆர் ஷெட்டி என்று தான் உள்ளது. இபிஃஎப்ஓ இணையதளத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று இவர் வைத்த கோரிக்கை பல மாதங்களாக நிலுவையில் உள்ளதால் விரக்தி அடைந்துள்ளார். இத்தனைக்கு இவர், இதற்கு முன்பு வேலை செய்த நிறுவனம் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. ஆனால் பெங்களூர் கேஆர்புரம் பிஃஎப் பீல்ட் ஆபிஸில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தி அடைந்த ஸ்ரீஜன், கடந்த ஜூன் 26 அன்று வைத்த கோரிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டை இணைத்து ​​"எனக்கு ரத்தத்தை கொதிக்க வைக்கும் ஒன்று இருந்தால், அது EPFO ​​தளம்" என்று கூறியுள்ளார். இந்த பிஃஎப் தளத்தில் என்னால் முடிந்த அளவிற்கு இந்த ஆண்டு பல மணிநேரங்களை நான் செலவழித்தேன். ஆனாலும் இன்னும் எனது சொந்த பணத்தை என்னால் எடுக்கவேமுடியவில்லை " என்று கூறியுள்ளார். Fuze என்ற ஆப்பை நிறுவி அதனை நடத்தி வரும் அவர், தனது பெயர் மாற்றக்கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

"எனது பெயர் தவறாக இருப்பதால் ( பெயர் தலைகீழாக மாறியிருந்தாலும்) என்னால் ஆதாரை பயன்படுத்தி மின்-கையொப்பமிடவோ அல்லது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பைப் பயன்படுத்தவோ முடியாத நிலை இருக்கிறது" என்றும் ஸ்ரீஜன் கூறினார். ஸ்ரீஜன் துபாயைச் சேர்ந்த தொழில்முனைவோராக வலம் வருகிறார். ஃபோர்ப்ஸ் மிடில் ஈஸ்ட் 30 அண்டர் 30 பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

epfo pf money

ஸ்ரீஜன் ஷெட்டி இப்போது பெங்களூரில் உள்ள EPFO ​​அலுவலகத்திற்கே நேரடியாக சென்று பிரச்சனைளை கூறி சரி செய்யப்போவதாக கூறியிருக்கிறார். 2040 ஆம் ஆண்டிற்குள் எனது பணம் என்னிடம் இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் விரக்தியுடன் கூறியிருக்கிறார்.. இவரை போல் பலரும் பிஃஎப் கணக்கில் பணம் எடுக்கும் விஷயத்தில் சிக்கலை சந்தித்து வருகிறார்கள். ஆனால் இந்த பிரச்சனை ஒருபுறம் எனில், பிஃஎப் அலுவலகம் அதன் யூடியூப் பக்கத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வீடியோவும் வெளியிட்டு வருகிறது. எனவே சந்தேகங்களுக்கு பிஃஎப் கணக்கின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் விளக்கங்களை பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+