என்னது கிங் மேக்கரா? ஆத்தீ! “நடக்கவே நடக்காது” அடித்துச் சொல்லும் பொம்மை.. அதே குரலில் காங்கிரஸ்!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பல கணிப்புகள், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்கின்றன. இதனால், ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி மீண்டும் 'கிங் மேக்கர்' ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ், பாஜக இரு கட்சித் தலைவர்களும் இதனை திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டதால் மும்முனை போட்டி நிலவுகிறது. 113 என்ற மேஜிக் நம்பரை யார் பெறுகிறார்களோ, அவர்கள்தான் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியும்.

எக்ஸிட் போல் முடிவுகள் : ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி காங்கிரஸ் மற்றும் பாஜக பெரும்பான்மை சீட்களை எட்டுவதில் இழுபறி நிலவுவதாகவே தெரிகிறது. இதனால், ஜேடிஎஸ் பெறும் சீட்களின் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா டுடே மற்றும் டுடே'ஸ் சாணக்யா, டைம்ஸ் நவ் - இடிஜி ஆகிய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்லது. இதனால் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் vs பாஜக : ஏபிபி- சி வோட்டர், ஜீ நியூஸ் மேட்ரைஸ், இந்தியா டிவி - சி.என்.எக்ஸ், ரிபப்ளிக் டிவி PMARQ, டிவி 9 பாரத்வர்ஷ் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை நம்பரை எட்டுவதற்கு சிரமப்படும் என்றும் தனிப்பெரும் கட்சியாக அதிக சீட்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத், நியூஸ் நேஷன் - சி.ஜி.எஸ், ராஜ்நீதி, போல்ஸ்ட்ராட் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேடிஎஸ் - கிங் மேக்கர் குமாரசாமி : இப்படி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கலவையாக ரிசல்ட் வந்துள்ளது. அதேசமயம், எல்லா கருத்துக்கணிப்புகளிலுமே சராசரியாக ஜேடிஎஸ் கட்சி 21-25 சீட்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த முறை போலவே, இம்முறையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக உருவெடுப்பார் என கூறப்படுகிறது. சுமார் 30 எம்எல்ஏக்களை வைத்திருந்த குமாரசாமி கடந்த முறை காங்கிரஸ் கூட்டணியில் முதல்வரானார். அதேபோல் தொங்கு சட்டசபை அமைந்தால், மீண்டும் குமாரசாமி கிங் மேக்கராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.
பெரும்பான்மை தான் : இந்நிலையில், இந்த எக்ஸிட் போல் முடிவுகளை தாங்கள் நம்பவில்லை என காங்கிரஸ் மற்றும் பாஜக இருதரப்பு தலைவர்களுமே தெரிவித்துள்ளனர். இழுபறி நிலை ஏற்படாது, தொங்கு சட்டசபை அமையாது, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பேசுகையில், "இந்த எக்ஸிட் போல் நம்பர்களை நான் நம்பவில்லை. 146 இடங்களை கடப்போம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கர்நாடகாவில் இரட்டை எஞ்சின் பழுதடைந்ததால் மக்கள் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர். எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்படாது" எனத் தெரிவித்துள்ளார்.
200% நம்பிக்கை : அதேபோல, கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் எனக்கு 200% நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன, எனவே அதில் நிறைய பிழைகள் இருக்கும்.
யாரும் கிங் மேக்கர் ஆகும் கேள்விக்கே இடமில்லை, என்னைப் பொறுத்தவரை மக்கள்தான் கிங் மேக்கர். அவர்கள் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது" என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். குமாரசாமி கிங் மேக்கர் ஆகக்கூடும் என்ற கணிப்பை இரு தரப்புமே மறுதலித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications