பெங்களூர் குழந்தைகள் கடத்தல்.. தமிழக, கர்நாடக ஐவிஎஃப் சென்டர்கள், டாக்டர்களுக்கு தொடர்பு?
பெங்களூர்: பெங்களூர் குழந்தை விற்பனை வழக்கில் போலி டாக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள ஐவிஎஃப் மையங்கள், டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு இதில் தொடர்பு உள்ளதாக போலீஸ் கருதுவதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் கடந்த 24ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் காரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக்கொணடிருந்தது. இதை பார்த்த குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். காரில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பேச்சு முன்னுக்கு பின் முரணாக இருந்தது. ஒருவர் ஒரு மாதிரியும், இன்னொருவர் வேறுமாதிரியும் பேசி உள்ளனர். அவர்கள் மாற்றி மாறி பேசியதால் போலீசுக்கு சந்தேகம் வந்தது.

அவர்களை தங்கள் பாணியில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த போது, அவர்கள் குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பல் என்பதும், அந்த பகுதியில் ஒரு குழந்தையை விற்பனை செய்ய காத்திருந்ததும் உறுதியானது. இந்த நிலையில் குழந்தை விற்பனை கும்பலை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார். கண்ணன் ராமசாமி, முருகேஷ், ஹேமலதா, சரண்யா, கோமதி, ராதாமணி, மகாலட்சுமி, சுகாசினி ஆகியோர் தான் பெங்களூருவில் குழந்தைகளை விற்று வந்தது உறுதியானது.
தமிழ்நாட்டின் ஈரோட்டை சேர்ந்த இந்த கும்பல் பச்சிளம் குழந்தைகளை கொண்டு வந்து பெங்களூருவில் குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்து வந்துள்ளார்கள். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60 குழந்தைகளை அவர்கள் விற்பனை செய்திருக்கிறார்கள் கர்நாடகத்தில் மட்டும் 10 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆண் குழந்தையை ரூ.10 லட்சம் வரைக்கும், பெண் குழந்தையை ரூ.5 லட்சம் வரைக்கும் விற்பனை செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் குழந்தை விற்பனையில் தொடர்புடையதாக ராஜாஜி நகரில் மருத்துவமனை நடத்தி வரும் கெவின் , ஹெப்பாலை சேர்ந்த ரம்யா ஆகியோரை கைது செய்தனர். இதில் கெவின் போலி டாக்டர் என்ற தகவலால் போலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ஏழைகளாக உள்ள கர்ப்பமான பெண்கள், கருவை கலைக்க விரும்பினால் அதுபற்றிய தகவல்களை சில மருத்துவமனைகள் உதவியுடன் தெரிந்து கொண்டு, அந்த பெண்களை ரம்யா நேரில் சந்தித்து பேசுவாராம். பின்னர் அவர்களது மருத்துவ செலவுகளை பார்த்து கொள்வதுடன், குழந்தை பெற்ற பிறகு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணத்தை கொடுத்து குழந்தையை வாங்கும் வேலையை ரம்யா செய்து வந்திருக்கிறார். தற்போது இரண்டு பேர் கைதாகி உள்ளதால் பெங்களூர் குழந்தை விற்பனை வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பி தயானந்தா செய்தியார்களிடம் நேற்று கூறுகையில், "நான்கு மருத்துவமனைகள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளன. மூன்று மருத்துவமனைகள் ஏற்கனவே காவல்துறையால் மூடப்பட்டுள்ளது. சில மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது" என்றார்.
இதனிடையே குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த பெண்கள் ஏழை பெண்களின் கரு முட்டைகளை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வாங்கி விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சட்டவிரோத வாடகைத் தாய்கள் மற்றும் குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடிகள் தொடர்பான தகவல்களையும் பெங்களூர் போலீசார் கையிலெடுத்துள்ளனர்.
குழந்தையை விற்ற ஏழை பெண்களிடம் விசாரித்த போது, பணத்திற்காக இதை செய்தோம் என்கிறார்கள். உங்களை எப்படி அவர்கள் தொடர்பு கொண்டார்கள் என்று கேட்டதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஐவிஎஃப் மையங்களில் பணிபுரிவோர் இப்படி செய்வதாக கூறியுள்ளனர். சட்டவிரோத பிறப்புச் சான்றிதழ் பெற மருத்துவர்கள் உதவியும் இருக்கிறார்கள். இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள ஐவிஎப் மையங்கள், டாக்டர்கள், மருத்துவமனைகள் இந்த விவகாரத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications