தொடுறதெல்லாம் ஷாக் அடிக்குதே.. பெங்களூர் வாசிகளை யோசிக்க வைத்த "ஸ்டேட்டிக் ஷாக்" எப்படி ஏற்படுது?
பெங்களூரில் உள்ள குடியிருப்பு வாசிகள் பலரும் இந்த மாத துவக்கத்தில் ஸ்டேட்டிக் ஷாக் (static shocks) என்று சொல்லக்கூடிய மின் அதிர்ச்சியை உணர்ந்ததாக கூறியிருந்தனர்.
பெங்களூர்: பெங்களூரில் உள்ள குடியிருப்பு வாசிகள் இந்த மாத துவக்கத்தில் ஸ்டேட்டிக் ஷாக் (static shocks) என்று சொல்லக்கூடிய மின் அதிர்ச்சியை உணர்ந்ததாக கூறியிருந்தனர். இந்த ஸ்டேட்டிக் ஷாக் என்றால் என்ன? எதனால் அது ஏற்படுகிறது என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பெங்களூருவில் உள்ள குடியிருப்பு வாசிகள் இந்த மாத துவக்கத்தில் ஸ்டேட்டிக் ஷாக் (static shocks) என்று சொல்லக்கூடிய மின் அதிர்ச்சியை உணர்ந்ததாக கூறியிருந்தனர்.
அதாவது ஏதாவது உலோக பொருள்களை தொடும் போது இத்தகைய ஷாக்-ஐ உணர முடிந்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டதை காண முடிந்தது. இது தொடர்பாக அகன்க்ஷ்கா கவுர் என்ற பெண் தனது ட்விட்டரில் இந்த தகவலை பகிர்ந்து இருந்தார்.

கதவு கைப்பிடியை திறக்கும் போது
இது தொடர்பாக அகன்க்ஷ்கா கவுர் கூறுகையில், "பெங்களூர் வாசிகளே சில நாட்களாக மெட்டல் பொருட்களை தொடும் போது உங்களால் ஸ்டேட்டிக் ஷாக்கை உணர முடிகிறதா? எனது நண்பர்கள் பலரும் இதை உணர்ந்து இருக்கின்றனர். கதவு கைப்பிடியை திறக்கும் போது நான் சிறிய அளவிலான ஸ்பார்க்கையும் பார்த்தேன்" என்று பதிவிட்டு இருந்தார். அதன்பிறகு பெங்களுரில் வசிக்கும் பல குடியிருப்பு வாசிகளும் இதே போன்ற ஸ்டேட்டிக் ஷாக்கை தாங்களும் உணர்ந்ததாக கூறியதை காண முடிந்தது.

ஸ்டேட்டிக் ஷாக்கிற்கு காரணம் என்ன?
பெங்களுரில் ஏற்பட்ட இந்த அசாதாரண நிகழ்வு குறித்து மக்கள் பலரும் சற்று குழம்பித்தான் போகினர். இதை விஞ்ஞானிகளும் நிபுணர்களும் உன்னிப்பாக கண்காணிக்க தொடங்கினர். இந்த ஸ்டேட்டிக் ஷாக் பற்றி அவர்கள் கூறுகையில், பெங்களூரில் நிலவும் வானிலை சூழலே இதற்கு முக்கிய காரணம் என்றனர். ஸ்டேட்டிக் ஷாக் குறித்த உறுதியான ஒரு விளக்கத்தை நிபுணர்கள் அளிக்கவிட்டாலும் கூட எலக்ரோஸ்டேட்டிக் டிஸ்சார்ஜ் (ESD) என்று சொல்லப்படும் இந்த ஸ்டேடிக் ஷாக், குளிர்காலம் முடிந்து வானிலை வெப்பமாக மாறத்தொடங்கும் போது ஏற்படும் என்று தெரிவித்தனர்.

சார்ஜ் டிரான்ஸ்பர் ஆகும் போது
மேலும் இது தொடர்பாக கூறுகையில், "மின்சார திறன்களை கொண்ட இரண்டு பொருள்களுக்கு இடையே திடீரென மின்னேற்றம் ஏற்படும் போது இவ்வாறு நடக்கும். ஒரு பொருள் ஸ்டேட்டிக் எலக்ட்ரிசிட்டியால் சார்ஜ் செய்யப்பட்டு மற்றொரு பொருளுடன் தொடர்பு ஏற்படும் ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு சார்ஜ் டிரான்ஸ்பர் ஆகும் போது இது நிகழும் என்று கூறினர். வறண்ட வானிலையின் போது ஸ்டேட்டிக் ஷாக் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. ஏனெனில் ஈரப்பதம் எலக்ட்ரிக் சார்ஜ்களை சிதைந்து போக வைக்க உதவும். வறண்ட காற்றின் போது, மின்சாரம் கடத்துவதற்கான ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும். இது மேற்பரப்புகளிலும் பொருட்களிலும் ஸ்டேட்டிக் மின்சாரத்தை அதிகரிக்கும்.

சின்தட்டிக் துணிகள்
பாலிஸ்டார் மற்றும் நைலான் போன்ற செயற்கை துணிகள் ஸ்டேட்டிக் மின்சாரத்தை ஏற்படுத்தும் ஒரு மின் கடத்திகளாக உள்ளது. இந்த துணிகள் ஒன்றுக்கொன்று உராயும் போது இந்த மின்சாரம் ஏற்படும். இந்த சமயத்தில் மெட்டல் பொருள்களை தொடும் போது ஸ்டேடிக் ஷாக்கை ஏற்படுத்தும். அதேபோல் கார்பெட்டுகளில் நடக்கும் போது அதன் மேல் போடப்பட்டு இருக்கும் விரிப்புகள் மூலமாக ஸ்டேட்டிக் எலக்ரிசிட்டி நமது உடலில் ஏற்படும். அப்போது எந்த பொருளையாவது தொட்டாலோ.. அல்லது யாரையைவது ஒரு நபரை தொடும் போதோ ஷாக்கை உணர முடியுமாம்.

ஸ்டேடிக் ஷாக் எப்படி ஏற்படும்
கம்ப்யூட்டர் மற்றும் கணிணி போன்ற எலக்ட்ரானிக் கருவிகளும் அதை பயன்படுத்தும் போது ஸ்டேட்டிக் எலக்ரிசிட்டியை ஏற்படுத்தும். மருத்துவமனை மற்றும் டேடா செண்டர்கள் போன்ற மிகவும் சென்சிட்டி மின் உபகரனங்கள் பயன்படுத்தக்கூடிய இடங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும். சில ஷூக்கள் மூலமாக இந்த ஸ்டேட்டிக் மின்சாரம் ஏற்பட்டு ஏதாவது பொருளை தொடும் போது ஸ்டேடிக் ஷாக் ஏற்படுமாம்.












Click it and Unblock the Notifications