பெங்களூரு 5 ஸ்டார் ஹோட்டலில் டெல்லி பியூட்டி டாக்டர்.. உள்ளே நுழைந்து பார்த்தால் ஆடிப்போன அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் 5 நட்சத்திர ஹோட்டல் ரூமை வாடகைக்கு எடுத்து, அங்கேயே அழகு மற்றும் உடல் எடை குறைப்பு சிகிச்சை அளிக்க டெல்லியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் திட்டமிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஹோட்டலில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கிடைத்த சில பொருட்கள் மற்றும் அந்தப் பெண் டாக்டரின் மருத்துவத் தகுதி குறித்து இப்போது விசாரணை நடைபெற்று வருகிறது. என்ன நடந்தது?

டெல்லியைச் சேர்ந்த பெண் டாக்டர் மான்சி சரீன், பெங்களூருவில் அழகு மற்றும் உடல் எடை குறைப்பு சிகிச்சை அளிக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் விளம்பரம் செய்துள்ளார். முகம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியும் அறிவித்துள்ளார்.

Bengaluru Beauty Doctor Bengaluru Hotel Raid Delhi Doctor

இந்த விளம்பரத்தை பார்த்த ஒருவர், மான்சியைத் தொடர்புகொண்டு சிகிச்சை குறித்து விசாரித்தபோது, ஒரு பகுதிக்கு ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை கட்டணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரு 5 ஸ்டார் ஹோட்டல்

மான்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் முன்பு 50,000-க்கும் அதிகமானோர் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அந்த கணக்கு முடக்கப்பட்ட பிறகு, புதிய கணக்கை தொடங்கி சிகிச்சை தொடர்பான விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.

இதற்காக நவம்பர் 5-ம் தேதி பெங்களூரு ரிச்மண்ட் சாலையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் மான்சி ரூம் எடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அன்று பகல் முதல் கஸ்டமர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டிருந்தாராம். சிகிச்சைக்கு முன்பதிவு செய்தவர்கள் முதலில் ஹோட்டல் ரிசப்ஷனுக்கு வந்து, அங்கிருந்து தன்னைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும், அதன் பிறகு அவர்களைத் தனது ரூமுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் பிளான் வைத்திருந்தாராம், டாக்டர் மான்சி

ஆனால் அதற்குள் இந்த விவகாரம் குறித்து இந்திய தோல் மருத்துவர்கள் சங்கத்தின் (IADVL) பெங்களூரு பிரிவினர் அதிகாரிகளிடம் புகாராக சென்றுவிட்டது.. இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டுத்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்று சோதனை நடத்தினர்.

சோதனையில் சிக்கிய பொருட்கள்

ஹோட்டல் ரூமில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகள், கொலாஜன் பொருட்கள் மற்றும் பல்வேறு உணவு சப்ளிமென்ட்கள் கிடைத்தன. மேலும், கொழுப்பை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் Lipo Lab PPC ஊசியின் காலி பெட்டிகளை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

இந்த பெட்டிகளில், இந்த ஊசி மருந்தை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய அல்லது இந்தியாவில் தயாரிக்க அனுமதி பெற்றதற்கான லைசென்ஸ் நம்பர் இல்லையாம்... அதனால் இந்த ஊசி மருந்து எங்கிருந்து வாங்கப்பட்டது, இதை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு முறையான அனுமதி உள்ளதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்டரின் தகுதி என்ன?

பிறகு சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் மான்சியிடம் விசாரணை ஆரம்பமானது.. அவரது மருத்துவப் படிப்பு மற்றும் தகுதி குறித்து அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள்.. அப்போதுதான் மான்சி, தான் ஒரு தோல் மருத்துவ நிபுணர் இல்லை என்றும், வெறும் எம்பிபிஎஸ் படித்துள்ளதாகவும், டெல்லி மருத்துவ கவுன்சிலில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறி அதிகாரிகளையே அதிர வைத்தார்.

ஆனால், தான் யாருக்கும் ஊசி மூலம் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், ஊட்டச்சத்து பொருட்களை கஸ்டமர்களிடம் காண்பித்து அவற்றை பற்றி ஆலோசனை மட்டுமே வழங்கியதாக மான்சி வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

அதற்கேற்றவாறு, ஊசி செலுத்துவதற்கான கருவிகளும் ஹோட்டல் ரூமில் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. ஆனால், Lipo Lab PPC ஊசியின் காலி அட்டைப்பெட்டிகள் கிடைத்துள்ளதால், அந்த ஊசி மருந்து எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, எதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

யார் இந்த மான்சி

அதேபோல மான்சி மருத்துவ படிப்பை எங்கு முடித்தார், அவரது மருத்துவப் பதிவு எண் என்ன, தோல் மருத்துவம் தொடர்பாக ஏதாவது கூடுதல் தகுதி பெற்றுள்ளாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். மான்சியுடன் அவரது சகோதரி சாக்‌ஷியும் பெங்களூரு வந்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதிகாரிகள் சோதனை நடத்திய பிறகு மான்சி ஹோட்டலைவிட்டு சென்றுவிட்டார்.. அங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்தவர்களிடம், அடுத்த முறை வரும்போது சந்திப்பதாக சொல்லிவிட்டு சென்றாராம்.. ஒருவேளை இந்த விவகாரத்தில் விதிமீறல்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டால் மான்சி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாக்டர்கள் வார்னிங்

தகுதியற்ற நபர்களிடம் இதுபோன்ற ஊசி சிகிச்சைகளை பெறுவது ஆபத்தானது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய தோல் மருத்துவர்கள் சங்கத்தின் விதிமீறல் தடுப்புக் குழுத் தலைவர் டாக்டர் ராஜேதா டாமிஷெட்டி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, தவறான முறையில் ஊசி சிகிச்சை அளிக்கப்பட்டால் நிரந்தர தழும்புகள் ஏற்படலாம். கண் பார்வை பாதிக்கப்படலாம். தோல் சிதைவு, கடுமையான தொற்று போன்ற பாதிப்புகளுடன் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று எச்சரித்துள்ளார்.

உடல் எடை குறைப்பு அல்லது அழகு சிகிச்சைக்காக எந்தவொரு ஊசியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், தகுதி வாய்ந்த மருத்துவர்களை மட்டுமே அணுக வேண்டும். அதுவும் முறையாகப் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள் அல்லது மருத்துவ நிலையங்களில் மட்டுமே இதுபோன்ற சிகிச்சைகளைப் பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+