"உல்லாசமாக இருக்கலாம் வாயா".. பெங்களூர் ரோட்டில் ஆண்களை அழைத்த வெளிநாட்டு பெண்கள்.. ஷாக் பின்னணி
பெங்களூர்: பெங்களூரில் ரோட்டில் நடந்து செல்லும் ஆண்களை வழிமறித்து உல்லாசமாக இருக்க அழைத்த 6 வெளிநாட்டு பெண்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் சிலர் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தாமாகவே விபசாரத்தில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்து வருகின்றது. அதேபோல் வேலை வாங்கி தருவதாக கூறி வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரும் பெண்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் பொது இடத்தில் நின்று ஆண்களை உடலுறவுக்கு அழைத்து 6 வெளிநாட்டு பெண்களை பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:
சாதாரண உடையில் கண்காணிப்பு
பெங்களூர் மடிவாளா செக்போஸ்ட் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பின் பக்கத்தில் இரவில் நின்று கொண்டு சில பெண்கள் விபசாரத்துக்கு ஆண்களை அழைப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடை அணிந்து அந்த இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
உல்லாசமாக இருக்க அழைப்பு
அப்போது பஸ் ஸ்டாப்பின் அருகே நடைப்பாதையில் நடந்து செல்லும் ஆண்களை இடைமறிக்கும் சில பெண்கள், ''உல்லாசமாக இருக்கலாம்'' என்று அழைத்தது தெரியவந்தது. பொது இடத்தில் வெளிநாடுகளை சேர்ந்த 6 பெண்கள் ஆண்களிடம் தவறான முறையில் நடந்து விபசாரத்துக்கு அழைத்து உறுதியானது..
வெளிநாட்டு பெண்கள்
இதையடுத்து போலீசார் அந்த 6 வெளிநாட்டு பெண்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் விபசாரம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டனர். விசாரணையில் அவர்களில் 3 பேர் தான்சானியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், 3 பேர் உகாண்டா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களுக்கு 25 வயது முதல் 30 வயதாகிறது. இவர்கள் படிப்பு, சுற்றுலா மற்றும் பிசினஸ் விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
விபசாரம் ஏன்?
பெங்களூர் வந்தவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் பெங்களூர் புறநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். பிறகு இரவு நேரம் ஆகும்போது மடிவாளா அருகே வந்து சாலையில் நடந்து செல்லும் ஆண்களை விபசாரத்துக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.
இவர்கள் 6 பேரும் முறையான விசாவில் இந்தியா வந்திருந்தாலும் கூட தற்போது விசா காலம் முடிவடைந்துள்ளது. விசா காலம் முடிவடைந்தாலும் கூட அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பாமல் பெங்களூரில் விபசாரம் செய்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டினருக்கான தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications