யோகா முதல் நடனம் வரை.. பெங்களூரில் ‘சம்மர் கல்சூரல் கேம்ப்'.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்க சூப்பர் சான்ஸ்
பெங்களூர்: கோடைகாலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் தான் பெங்களூரில் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு யோகா, நடனம், பாரம்பரிய விளையாட்டுகளுடன் கூடிய 'கல்சூரல் கனெக்ட் சம்மர் கேம்ப் 2026' நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
கோடை காலம் நெருங்கிவிட்டது. பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறை காலம் தொடங்கி விட்டது. இந்த கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்க பெங்களூரில் Cultural Connect Summer Camp 2026 நடைபெற உள்ளது.

இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். இந்த கேம்ப் குழந்தைகளுக்கு தனியாகவும், பெரியவர்களுக்கு தனியாகவும் நடைபெற உள்ளது.
இந்த கேம்ப் பெங்களூர் குயின்ஸ் ரோட்டில் உள்ள சஞ்சேவாணி பத்திரிகை அலுவலகத்திற்கு அடுத்து அமைந்து இருக்கும் பிஎஸ் மணி நூலகலத்தில் (B.S Mani Library) நடைபெற உள்ளது. குழந்தைகளுக்கான கேம்ப் ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெறும். பெரியவர்களுக்கான கேம்ப் மே 11ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.
இந்த கேம்ப்பில் பல்வேறு Activies இருக்கிறது. அதன்படி ஹெல்த் ஹேர் என்று எடுத்து கொண்டால் யோகாவில் அடிப்படை ஆசனங்கள் கற்று தரப்படும். அதேபோல் பாரம்பரிய நடன கலைகளான ஒயிலாட்டம், கோலாட்டம், புலியாட்டம், மயிலாட்டம், கை சிலம்பாட்டம் கற்று தரப்படும். பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, டவர் ஆஃப் பிரம்மா, ஆடு - புலி ஆட்ம், தாயம்/பகடை, நவகன்காரி, செஸ் உள்பட பிற விளையாட்டுகள் இடம்பெறும்.

அதேபோல் பர்சனாலிட்டி டெவலப்மென்ட்டில் 'ஸ்டோரி டெல்லிங்', புத்தகம் வாசித்தால் மற்றும் சாப்ட் ஸ்கில்ஸ் கற்று தரப்படும். ஆர்ட் மற்றும் கிராப்ட் பிரிவில் பனை ஓலை மற்றும் தேங்காய் ஓடுகளை பயன்படுத்தி கைவினை பொருட்கள் செய்ய கற்று கொடுக்கப்படும். இந்த'கேம்ப்'பில் பங்கேற்க கட்டணமாக ரூ.2,900 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கம், பிஎஸ் மணி நூலகம், பிஎஸ் மணி கல்வி, வேலைவாய்ப்பு தொழில் மேம்பாட்டு பள்ளியை தொடர்பு கொள்ளலாம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications