Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் - நைஸ் ரோடு சுங்க கட்டணம் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ஓசூர் ரோட்டில் எலக்ட்ரானிக் சிட்டி முதல் அத்திபள்ளியை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும். இந்நிலையில் தான் சுங்கக்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

கர்நாடகா தலைநகர் பெங்களூர் - தமிழ்நாட்டின் ஓசூர் இடையே எலக்ட்ரானிக் சிட்டி உள்ளது. பெங்களூரின் மிக முக்கிய இடமாகும். இங்கு ஐடி உள்பட பல முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

bengaluru-electronic-city-flyover-and-attibele-high-war-toll-charges-hiked-from-today

இதனை தவிர்க்க பெங்களூர் சென்ட்ரல் சில்க் போர்ட்டில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் பயணத்தை கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த மேம்பாலத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையகத்தின் பெங்களூர் எலிவேட்டட் டோல்வே பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் தான் தற்போது டோல் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு கட்டணம் உயர்வு?

அதன்படி ஒருமுறை மட்டுமே சென்று வர கார், ஜீப், வேன் உள்ளிட்டவற்றுக்கான டோல் கட்டணம் ரூ.60ல் இருந்து ரூ.65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பலமுறை சென்று வருவதற்கான டோல் கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.95 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாத பாஸ் என்றால் ரூ.1885 செலுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஒரு முறை சென்றுவர பழைய கட்டணம் ரூ.25 மட்டுமே கொடுத்தால் போதும்.

அதேபோல் லாரிகள் மற்றும் மல்டி ஆக்சில் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி லாரி, பஸ்கள் ஒருமுறை சென்று வர ரூ.175 செலுத்த வேண்டும். மாத பாஸ் என்றால் ரூ. 5,275 செலுத்த வேண்டும். மல்டி ஆக்சில் வாகனங்கள் ஒருமுறை சென்று வர ரூ.350, மாத பாஸ் என்றால் ரூ.10,500 செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அத்திப்பள்ளி சுங்கச்சாவடி

அதேபோல் அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் கார்கள் ஒருமுறை செல்வதற்கான சுங்கக்கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.40 ஆக அதிகரித்துள்ளது. கார்கள் சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 ல் இருந்து ரூ.65 ஆக உள்ளது. மாத பாஸ் கட்டணம் ரூ.1,130 ஆக உள்ளது.

மல்டி ஆக்சில் வாகனங்கள் என்றால் ஒரு டிரிப்பிற்கு ரூ.265 செலுத்த வேண்டும். மாத பாஸ் என்றால் ரூ.7,915 கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு 2026 ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

நைஸ் ரோட்டிலும் கட்டணம் உயர்வு

அதேபோல் பெங்களூர் நைஸ் ரோட்டில் உள்ள டோல் கேட்டின் சுங்கக்கட்டணமும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நைஸ் ரோட்டில் ஓசூர் ரோடு - பன்னரகட்டா ரோடு வரையிலான 8.74 கிலோமீட்டர் தொலைவுக்கான சுங்கக்கட்டணம் காருக்கு ரூ.65, பஸ்சுக்கு 195, லாரிகளுக்கு ரூ.128, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பன்னரகட்டா ரோடு முதல் கனகபுரா ரோடு வரையிலான 6.79 கிலோமீட்டர் தூரத்துக்கு காருக்கு ரூ.48, பஸ்சுக்கு ரூ.155, லாரிக்கு ரூ.98, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கனகபுரா ரோடு - குளோவர் லீப் ஜங்ஷன்

மேலும் கனகபுரா ரோடு முதல் குளோவர் லீப் சந்திப்பு வரையிலான 4.36 கிலோமீட்டர் தொலைவுக்கு காருக்கு ரூ.35, பஸ்சுக்கு ரூ.95, லாரிகளுக்கு ரூ.60, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 என கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.

குளோவர்லீப் சந்திப்பு முதல் மைசூரு ரோடு வரையிலான 3.88 கிலோமீட்டர் தொலைவுக்கு காருக்கு ரூ.33, பஸ்சுக்கு ரூ.85, லாரிகளுக்கு ரூ.50, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மைசூரு ரோடு - மாகடி ரோடு

மைசூரு ரோடு முதல் மாகடி ரோடு வரையிலான 9.55 கிலோமீட்டர் தொலைவுக்கு காருக்கு ரூ.70, பஸ்சுக்கு ரூ.205, லாரிகளுக்கு ரூ.140, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.30 எனவும், மாகடி ரோட்டில் இருந்து துமகூரு ரோடு வரையிலான 7.48 கிலோமீட்டர் தொலைவிலான சாலையில் காருக்கு ரூ.55, பஸ்சுக்கு ரூ.160, லாரிகளுக்கு ரூ.105, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.25 என சுங்கக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக லிங்க் ரோட்டில் 8.10 கிலோமீட்டர் தொலைவுக்கு காருக்கு ரூ.75, பஸ்சுக்கு ரூ.200, லாரிகளுக்கு ரூ.135, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.23 என சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+