பெங்களூர் ஓட்டலில் 21 வயது மனைவி.. கொஞ்ச நேரத்தில் பதறி வெளியேறிய கணவர்.. ரூமுக்குள் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரு அருகே ஒரு ஓட்டல் ரூமில் 21 வயது பெண்ணுக்கு ஏன் இந்த கதி? என்ன காரணம்? என்பது குறித்த விசாரணையை போலீசார் கையிலெடுத்துள்ளனர்.. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனியாக வசித்து வந்த அந்தப் பெண், மீண்டும் கணவரை சந்திக்க ஓட்டலுக்கு சென்றிருக்கிறார். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே கணவன் மட்டும் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அந்த அறைக்குள் நடந்தது என்ன என்பது இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அருகே டாடாபல்லாபூரில் வசித்து வருபவர் வித்யா. தனியார் நிறுவனத்தில் ஹெல்பராக வேலை பார்த்து வருபவரி.. இவரது ஆனந்துக்கு 29 வயது. இருவரும் கவுரிபிதனூரைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் தம்பதிக்குள் அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் தகராறு வந்து போயிருக்கிறது.

Bengaluru hotel room

பெங்களூரு தம்பதி

இந்த பிரச்சனை காரணமாக வித்யா, கணவரை விட்டு விலகி பெங்களூருவில் உள்ள பிஜி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.. வார இறுதி நாட்களில் மட்டும் தனது குழந்தையையும் பெற்றோரையும் சந்திக்க கவுரிபிதனூருக்கு சென்று வருவாராம் வித்யா. அப்போதும் தம்பதிக்குள் அதிக தகராறுகள் வந்துள்ளன..

இதனால் கடந்த ஜூன் மாதம் வித்யா காணாமல் போய்விட்டதாக ஆனந்த், உள்ளூர் மகளிர் ஸ்டேஷனிலேயே புகார் அளித்திருந்தார். சில நாட்களுக்குப் பிறகு வித்யாவை போலீசார் கண்டுபிடித்து, தம்பதி இருவருக்கும் கவுன்சிலிங் தந்திருக்கிறார்கள்.. ஆனாலும் அதன்பிறகும் இருவரும் தனித்தனியாக வசிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில்தான், நேற்று முன்தினம் ஆனந்த், வித்யாவை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு சமாதானப்படுத்த நினைத்துள்ளார்.. இதற்காக டாடாபல்லாபூர் பசவ பவனுக்கு அருகே உள்ள ஓட்டலுக்கு வித்யாவை அழைத்து சென்று ரூம் போட்டு மனைவியுடன் தங்கியிருக்கிறார்.. இருவரும் அறைக்குள் சென்ற நிலையில், அன்று சாயங்காலம் ஆனந்த் மட்டும் அங்கிருந்து வெளியேறியுள்ளார். வித்யா ரூமிலேயே இருந்துள்ளார்.

ஹோட்டல் ரூம்

இரவு நேரத்தில் லாட்ஜ் ஊழியர்கள் ரூம் கதவை தட்டியபோது எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், மாற்று சாவியை பயன்படுத்தி கதவைத் திறந்தனர். அப்போது படுக்கையில் வித்யா உயிரிழந்த நிலையில் கிடந்ததைப் பார்த்தனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வித்யாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர். ஆரம்பகட்ட விசாரணையில், வித்யாவின் அடையாள அட்டையில் இருந்த கழுத்துப்பட்டை போன்ற லேன்யார்டை பயன்படுத்தி அவரை கழுத்தை நெரித்துவிட்டு, ஆனந்த் மனைவியின் செல்போனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகிறார்கள். எனவே, தப்பியோடிய ஆனந்தை தேடும் பணி நடந்து வருகிறது.

இன்னொரு ட்விஸ்ட்

இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், வித்யாவுக்கு திருமணம் நடந்தபோது அவர் மேஜர் கிடையாதாம்.. சிறுமியாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதால், ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே வித்யாவின் மரணத்துக்கான சரியான காரணத்தை உறுதி செய்ய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். ஆனந்த் கிடைத்த பிறகே லாட்ஜில் நடந்த சம்பவத்தின் முழு பின்னணியும் தெளிவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+