"ஆபாச வீடியோவில் இருப்பது நீயா".. மனைவியை துளைத்தெடுத்த கணவர்.. பெங்களூருவில் அதிர்ச்சி
ஆபாச வீடியோ தொடர்பாக மனைவியை குத்தி கொலை செய்தார் கணவர்
பெங்களூரு: சந்தேகம் அளவுக்கு அதிகமாக உருவெடுத்து, மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டார் கணவர்.. இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது..!
பெங்களூருவில் வசித்து வந்தவர் காதர்பாஷா... மனைவி பெயர் முபீனா... இவர்களுக்கு கல்யாணமாகி 15 வருடங்கள் ஆகின்றன.
இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்... காதர் பாஷா ஆட்டோ டிரைவர்.. அந்த பகுதியிலேயே சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

ஆபாச வீடியோ
இவருக்கு செல்போனில் ஆபாச படங்கள் பார்ப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.. சவாரி இல்லாதபோதெல்லாம் ஆபாச வீடியோக்களை பார்த்து வந்துள்ளார்.. அந்த வகையில் 2 மாதங்களுக்கு முன்பு, வீடியோ ஒன்றை பார்த்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த பெண், அச்சு அசல் தன்னுடைய மனைவியை போலவே இருந்துள்ளதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

மனைவி
இதனால் உடனடியாக மனைவி மீது சந்தேகம் வந்துவிட்டது.. இந்த விஷயத்தை மனைவியிடமே வந்து கேட்டுள்ளார்.. இது தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதமும், சண்டையும் வந்து போயுள்ளதாக தெரிகிறது.. இப்படித்தான், 2 மாதங்களுக்கு முன்பு, சொந்தக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு மனைவியை அழைத்து சென்றிருந்தார் காதர் பாஷா.. அப்போது திடீரென இந்த ஆபாச வீடியோ விவகாரம் வெடித்து, அங்கேயே மனைவியை மீண்டும் தாக்கி உடைத்துள்ளார்..

ராமாநகர்
அங்கிருந்தவர்கள், இவர் ஏன் மனைவியை கண்மூடித்தனமாக அடிக்கிறார் என்று துருவி துருவி கேட்டதையடுத்து, அவர்கள் அனைவரிடமும் விஷயத்தை போட்டு உடைத்துள்ளார் பாஷா. இதைக்கேட்டு உறவினர்கள் பதறிப்போனார்கள்.. பிறகு, பாஷாவை கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், இந்த ஆபாச வீடியோ பிரச்சனை ஒரு முடிவுக்கு வரவில்லை.. தொடர்ந்து விஸ்வரூபமெடுத்தவாறே இருந்திருக்கிறது.. ஒருகட்டத்தில், ராமாநகரில் புது வீடு பார்த்து அங்கு குடும்பத்துடன் குடியேறினார் காதர் பாஷா..

நீயா?
அங்கேயும் சந்தேகம் அவருக்கு நீங்கவில்லை.. அந்த ஆபாச வீடியோவில் இருந்தது நீயா? என்று கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார்.. கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இதே கேள்வியைதான் கேட்டுள்ளார்.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மனைவி, ஆத்திரத்தில் சத்தமாக திட்டி தீர்த்துள்ளார்.. இதை கேட்டதும் ஆவேசம் அடைந்த பாஷா, கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்திவிட்டார்.. வீட்டில் இருந்த ஐந்து குழந்தைகளும் இதை உறைந்து போய் பார்த்து கொண்டிருந்தன.. வலி பொறுக்க முடியாமல், ரத்த வெள்ளத்தில் மனைவி சுருண்டு விழுந்தார்..

கைது - ஜெயில்
5 குழந்தைகளில், மூத்தமகன் மட்டும் ஓடிச்சென்று தன் தாத்தாவிடம் இதை பற்றி சொல்லி உள்ளான்.. ஆனால் அவர் வருவதற்குள் முபீனா இறந்துவிட்டார்.. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.. இறுதியில் பாட்ஷாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. ஆபாச வீடியோவில் பார்த்த பெண், தன்னுடைய மனைவிதான் என்று சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications