Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் கார்ப்பரேட் அடிமையில்லை.. வேலையை விட்டுவிட்டு பெங்களூரில் ஆட்டோ ஓட்டும் நபர்.. வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ‛‛நான் ஒன்றும் கார்ப்பரேட் அடிமை இல்லை'' என்று பிரபல நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் அந்த வேலையை விட்டுவிட்டு பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‛‛வாழ்க்கை யாருக்கும் முடிவது கிடையாது. வாழ்க்கையை வாழுங்கள். பணம் வாழ்க்கைக்கு தேவை தான். ஆனால் வாழ்க்கை வாழ பணம் மட்டும் தான் தேவை என்பது கிடையாது. பணத்தை தவிர பிற விஷயங்களும் வாழ்க்கைக்கு முக்கியம். வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை வாழுங்கள்'' என கூறி வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.

பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி செய்யும் கைநிறைய சம்பாதித்தால் பலரும் தங்களின் நிறுவனத்தை அவ்வப்போது திட்டுகின்றனர். அதிகப்படியான வேலையை வாங்குகிறார்கள். கூடுதல் நேரம் பணி செய்ய சொல்கிறார்கள் என்று நண்பர்கள், குடும்பத்தினரிடம் புலம்புவதை நாம் பார்த்து இருப்போம்.

bengaluru-man-quits-corporate-jobs-and-becomes-auto-driver-now-his-video-went-viral

மேலும் பலரும் சில ஆண்டுகள் மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு அதன்பிறகு சொந்தமாக தொழில் தொடங்குவது, இல்லாவிட்டால் தங்களுக்கான பேஷனை நோக்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் தான் கார்ப்பரேட் நிறுவன பணியை விட்டுவிட்டு ஒருவர் பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

ராகேஷ் ஆட்டோ டிரைவர் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தினமும் மோட்டிவேஷன் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் போட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது. ஆட்டோ டிரைவர்.. நான் கார்ப்பரேட் அடிமை இல்லை என்ற தலைப்பில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர் பேசியுள்ளதாவது:

இது நான். நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். என்னை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களுக்கு நான் பயப்படுபவன் இல்லை. என் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு நான் பயப்படுவது இல்லை. இந்த வாழ்க்கை முடியப் போகிறது என்று நினைப்பவர்களுக்கு தான் இந்த வீடியோ. வாழ்க்கையின் கடினமான கட்டத்தை கடந்து செல்பவர்களுக்கு இது. நான் வாழ்க்கையை விட்டுவிட்டேன். அதில் இருந்து ஒருபோதும் மீள மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் இதோ நான் ஒரு ஆட்டோ ஓட்டுகிறேன். வாழ்க்கை முடிவது இல்லை. எந்த பிரச்சனையாலும் என் வழியில் நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் எதை பற்றியும் பயப்படவில்லை.

இப்படியான வாழ்க்கையை வாழ்ந்து செல்லலாம். வாழ்க்கையை வாழுங்கள். பணம் என்பது வாழ்க்கைக்கு தேவை தான். அதனை நான் முழுவதுமாக புரிந்து வைத்துள்ளேன். அதேவேளையில் வாழ்க்கை வாழ பணம் மட்டும் தான் தேவை என்பது கிடையாது. பணத்தை தவிர பிற விஷயங்களும் வாழ்க்கைக்கு முக்கியம். வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை வாழுங்கள்'' என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் பணம், பணம் என்று கார்ப்பரேட் நிறுவனங்களில் அடிமையாக பணியாற்றி வருகின்றனர். உண்மையில் அந்த வேலை பிடிக்கவில்லை என்றால் அதில் இருந்து வெளியே வாருங்கள் என்ற வகையில் அவர் கூறியுள்ளார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் வீடியோவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் 8357 பேர் பகிர்ந்துள்ளனர். மேலும் பலரும் தங்களின் சொந்த அனுபவங்களை கமெண்ட்டாக தெரிவித்து வருகின்றனர். ஒருவர், ‛‛மேலை நாடுகளில் பணியாற்றுவோர் தங்களின் குடும்பத்துக்காக எந்த வகையான வேலைகளையும் செய்கின்றனர். அதேவேளையில் இங்கு சில வேலைகளை மரியாதை குறைவாக நினைக்கின்றனர். இது மாற வேண்டும். உங்களுக்கு வாழ்த்துகள்'' என்றார்.

இன்னொருவரோ, ‛‛இந்தியாவில் உள்ள ஐடி மற்றும் பிற கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களை நடத்தும் விதம் மிகவும் கொடூரமானது. உளவியல் சார்ந்த விஷயங்களை அறியாமல் பலர் உள்ளனர். அவர்கள் திருந்த வேண்டும்'' என்று கூறியுள்ளார். இன்னொருவரோ, ‛‛நான் எம்பிஏ (எச்ஆர் மற்றும் மார்க்கெட்டிங் முடித்துள்ளேன். இப்போது டிரைவராக பணியாற்றி வருகிறேன். ரேபிடோவும் ஓட்டுகிறேன் என்றார்'' என்றார்.

மற்றொருவரோ, ‛‛நான் இன்ஜினியரிங் முடித்தேன். அரபு நாட்டில் 15 ஆண்டுகள் பணியாற்றினேன். இப்போது எனக்கு பிடித்த டீக்கடையை திறந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். இப்படி பலரும் கமெண்ட்டுகள் போட்டு வருவதால் இந்த பதிவு அதிகமானவர்களை ரீச் செய்து வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+