"தலையே சுத்திடுச்சு.." பக்கத்து தெருவுக்கு போக 71 நிமிடங்களாம்! பெங்களூர் டிராபிக் பரிதாபங்கள்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் எப்படி இருக்கும் எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இதற்கிடையே அங்கே ஊபர் புக் செய்த நபர் பதிவிட்ட போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து நகரங்களிலும் டிராபிக் என்பது மிகப் பெரிய தலைவலியாக மாறி வருவது. அதில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருக்கும் டிராபிக் பிரச்சினை குறித்து தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை.

நமது நாட்டிலேயே அதிக டிராபிக் பிரச்சினை இருக்கும் நகரங்களில் முதன்மையானதாகப் பெங்களூர் இருக்கிறது. அங்கே பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் டிராபிக்கில் பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.
கர்நாடகா: பெங்களூரில் உச்சத்தில் இருக்கும் டிராபிக் பிரச்சினையை விளக்கியே பல மீம்கள், காமெடி வீடியோக்கள் இணையத்தில் உலா வருகிறது. மேலும், பெங்களூர் டிராபிக்கில் நடுரோட்டில் மக்கள் செய்யும் காரியங்களும் பேசுபொருள் ஆகத் தவறுவதில்லை. பீக் ஹவர்ஸின் போது போக்குவரத்து நெரிசலால் பெங்களூர் எப்படி பாதிக்கப்படுகிறது, இதுபோன்ற நெருக்கடியான சமயத்தில் பொதுமக்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து ரைட்அப்கள் சிரிப்பையே ஏற்படுத்தும்.
அப்படி ஒரு காமெடியான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.. பெங்களூருவாசி ஒருவர், ஊபர் செயலியில் ஆட்டோ புக் செய்ய முயன்ற போது என்ன நடந்தது என்பது குறித்த சுவாரஸ்யமான தகவலைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பொதுவாக பீக் ஹவரில் இதுபோன்ற செயலிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் ரைட்டை ஏற்றுக் கொள்வது அரிதிலும் அரிது.
தலையே சுற்றுகிறது: இங்கே அந்த ஆட்டோ ஓட்டுநர் ரைட்டை ஏற்றுக்கொண்டாலும், அதற்கு அவர் கைதிருக்க வேண்டிய நேரம் தான் சற்று தலையே சுற்றும் வகையில் இருக்கிறது. அதாவது அந்த ஆட்டோ புக் செய்தவரின் லோக்கஷேனில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேபோல வெயிட்டிங் நேரமும் 71 நிமிடங்கள் என்றே வந்து உள்ளது.
அவர் இந்த ஸ்கீரின் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், "அந்த டிரைவர் 24 கிமீ தாண்டி வந்தால் அது பெரிய அதிசயம் தான்.. அவருக்கு மிகப் பெரிய மரியாதை" என்று #peakbengaluru என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்துள்ளார்.
ஆட்டோ டிரைவர்: அந்த ஆட்டோ டிரைவருக்கு 4.8 ஸ்டார் இருக்கிறது. அதாவது இதுவரை அவர் மிகச் சிறப்பாகவே வண்டி ஓட்டி இருக்கிறார். ஆனாலும், பக்கத்தில் டிராப் செய்ய இவர் 24 கிமீ கடந்து 71 நிமிடங்கள் பயணித்து வருவது சாத்தியமே இல்லை என்றே நெட்டிசன்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.
இது குறித்த ஸ்கீரின்ஷாட்டை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்குப் பல வித கமெண்டுகள் வந்து கொண்டு இருக்கிறது. நெட்டிசன் ஒருவர், "இந்த ஸ்கிரீன்ஷாட் பெங்களூரில் நிச்சயம் ஆபீசுக்கு வர வேண்டும் என்று சொல்லும் நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும் வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

பெங்களூர்: அதேபோல மற்றொருவர், "நாம் பெங்களூரை தவிர்த்து 2& 3 நகரங்களுக்கு ஏன் செல்ல வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. அதிக உற்பத்தி, குறைந்த செலவு மற்றும் நிம்மதியான வாழ்க்கைக்கு நிறுவனங்கள் இது குறித்துச் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
அனைவரும் ஆட்டோ டிரைவர் பற்றியே பேசும் நிலையில், மற்றொரு பயனாளி இந்த ஆட்டோவை புக் செய்தவரே 71 நிமிடங்கள் வெயிட் செய்து ஆட்டோ ஏறினால் அதுவே பெரிய சாதனை என்று ட்வீட் செய்துள்ளார்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications