பெங்களூரில் கடும் குளிர்.. 10 டிகிரிக்கு போன வெப்பநிலை.. அடுத்த வாரம் தான் முக்கியமாம் - வார்னிங்
பெங்களூர்: பெங்களூரில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் நிலையில் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளதோடு, வரும் நாட்களிலும் இந்த குளிர் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் டிசம்பர் மாதத்தில் குளிர் அதிகரிக்கும். குறிப்பாக தமிழ் மாதமான மார்கழியில் கடும் குளிர் நிலவும். நாளை மார்கழி மாதம் பிறக்க உள்ளது. இப்படியான சூழலில் தான் மார்கழிக்கு முன்பாகவே பெங்களூரில் கடும் குளிர் மக்களை வாட்ட தொடங்கி உள்ளது.
கடந்த வாரம் பெங்களூரின் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 16 டிகிரி செல்சியஸாக இருந்தது. நேற்று முன்தினம் பெங்களூர் நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக இருந்தது. தற்போது அது இன்னும் கூட குறைந்துள்ளது. இதனால் பெங்களூரில் குளிர் அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் பெங்களூர் தெற்குப்பகுதிகளில் இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. அதேபோல் பெங்களூர் புறநகர் பகுதிகளில் 10.4 டிகிரி செல்சியஸ், பெங்களூர் நகரில் 10.8 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை குறைந்து மக்களை குளிர் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது.
பெங்களூரை எடுத்து கொண்டால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக 2016ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக இருந்தது. தற்போது அதைவிட வெப்பநிலை குறைந்தது. இதனால் இந்த டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு குளிரை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த குளிர் என்பது பெங்களூர் மட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள பீதர், கலபுரகி, விஜயாப்புரா, யாதகிரி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பெலகாவி, தார்வார் உள்ளிட்ட வடகர்நாடகா மாவட்டங்களில் எதிரொலிக்கிறது. அங்குள் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பொதுவாக கடும் பனிப்பொழிவு, வறண்ட வானிலை, தெளிவாக வானம் இருத்தல் உள்ளிட்டவை குளிரை அதிகரிக்கும். இந்த 3 காலநிலையும் பெங்களூரில் நிலவி வருகிறது. இதனால் வரும் நாட்களில் பெங்களூர் நகரின் குளிர் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெங்களூரில் குளிர் இன்னும் அதிகரிக்கும் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி பெங்களூரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி சிஎஸ் பாட்டீல் கூறுகையில், ‛‛வறண்ட காற்று, தெளிவான வானம் மற்றும் நிலையான வளிமண்டல சூழல் ஆகியவற்றின் கலவையால் வெப்பநிலை குறைகிறது. இவை அனைத்தும் இரவுநேர வெப்பநிலையை குறைத்து குளிர்ச்சியை அதிகரிக்கிறது.
மேலும் குளிருக்கு வடகிழக்கு காற்று வலுசேர்க்கிறது. இந்த காற்று வடக்கு மற்றும் மத்திய இந்தியாில் உள்ள உயர் அழுத்த மண்டலத்தில் இருந்து குளிர்ச்சியான, வறண்ட காற்றை தெற்கு நோக்கி கொண்டு வருகிறது. இதனால் குளிரும் அதிகரிக்கிறது அதேபோல் அதிகாலை பனிப்பொழிவும் குளிரை கூட்டி உள்ளது'' என்றார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications