Bengaluru Metro Fare: பெங்களூர் மக்களுக்கு குட்நியூஸ்.. மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூருவில் ஓடும் மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் ரூ.1 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டது. இந்த டிக்கெட் கட்டணம் நாளை (பிப்ரவரி 9) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

சென்னையை போல் பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள பெங்களூரில் வசிக்கும் மக்களுக்கு பெங்களூர் மெட்ரோ ரயில் சேவை வரப்பிரசாதமாக உள்ளது. இருப்பினும் பெங்களூர் நகர் முழுவதும் மெட்ரோ ரயில் சேவை இல்லை.

bengaluru-metro-fare-hike-kept-on-hold-says-bmrcl

தற்போது பெங்களூர் நகரில் மொத்தம் 96.10 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. பெங்களூருவில் மாதவரா முதல் சில்க் போர்ட் வரை பச்சை வழித்தடத்திலும், ஒயிட்பீல்டில் இருந்து சல்லகட்டா வரை ப்ளூ வழித்தடத்திலும், ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மஞ்சள் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. மேற்கொண்டு மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

டிக்கெட் கட்டணம் உயர்வு

இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சமாக ரூ.5 வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.95 ஆகவும் அதிகரித்து இருந்தது.

கடும் எதிர்ப்பு

இந்த கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுமக்களும் எதிர்ப்பை பதிவு செய்தனர். பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை எடுத்து கொண்டால் இந்தியாவிலேயே அதிக கட்டணம் உள்ள சேவையாகும். இப்படியான சூழலில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்பியது.

கட்டண உயர்வு நிறுத்தம்

இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிஎம்ஆர்சிஎல் எனும் பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‛‛ பிப்ரவரி 5ம் தேதி கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இது பிப்ரவரி 9 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கட்டண உயர்வு அடுத்த அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட கட்டணம் குறித்த அறிவிப்பு வாரிய குழுவின் மறுபரிசீலனைக்கு பிறகு அறிவிக்கப்படும். பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மலிவு விலையில் மெட்ரோ ரயில் சேவைகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு கட்டணம் உயர்ந்தது?

முன்னதாக மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்கு Fare Fiation Committee (FFC) செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 10 அடுக்குகளாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதன்படி 0-2 கிலோமீட்டர் தொலைவுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், 2 முதல் 4 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.21 ஆகவும், 4 முதல் 6 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ30ல் இருந்து ரூ.31 ஆக அதிகரிக்கப்பட்டது.

பிறகு 6 முதல் 8 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.40ல் இருந்து ரூ.42 ஆகவும், 8 முதல் 10 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.53 ஆகவும், 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.60 ல் இருந்து ரூ.63 ஆகவும், 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.70ல் இருந்து ரூ.74 ஆகவும் உயர்த்தப்பட்டு இருந்தது.

20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.80ல் இருந்து ரூ.84 ஆகவும், 25 கிலோமீட்டர் தொலைவுக்கும் மேலான பயணத்துக்கான கட்டணம் ரூ.90 ல் இருந்து ரூ.95 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த கட்டண உயர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+