பெங்களூருவுக்கு குட்நியூஸ்.. களேன அக்ரஹாரா – தாவரகெரே மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் 'பிங்க்' மெட்ரோ வழித்தடத்தில் களேனஅக்ரஹாரா – தாவரகெரே இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 7.5 கிலோமீட்டர் தொலைவிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார். இந்த வழித்தடத்தில் எந்தெந்த இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன என்பது பற்றி பார்க்கலாம்.

bengaluru-metro-pink-line-pm-modi-inagurates-and-traveling-by-metro-from-tavarakere-to-iimb

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகளை விரிவுப்படுத்தும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி பெங்களூர் பன்னரக்கட்டா சாலையையொட்டிய களேனஅக்ரஹராவில் இருந்து நாகவாரா வரை 21 கிலோமீட்டர் தொலைவுக்கு 'பிங்க் லைன்' வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை இயக்குவதற்கான பணிகள் நடந்து வந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக களேனஅக்ரஹாராவில் இருந்து தாவரகெரே (சுத்தகுண்டேபாளை) வரை 6 ஸ்டேஷன்களுடன் 7.5 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ வழித்தட பணிகள் முடிவடைந்தன. அதன்பிறகு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது.

இன்று பிரதமர் மோடி களேனஅக்ரஹாரா - தாவரகெரே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியுடன், கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் பச்சை கொடியசைத்து இந்த மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ்அதன்பிறகு பிரதமர் மோடி, முதல்வர் டிகே சிவக்குமார், பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உள்ளிட்டோர் களேனஅக்ரஹாராவில் இருந்து ஐஐஎம் பெங்களூர் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தனர்.

இந்த புதிய வழித்தடத்தில் மொத்தம் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அதன்படி களேன அக்ரஹாரா, ஹூலிமாவு, ஐஐஎம் பெங்களூர், ஜேபி நகர் 4வது ஸ்டேஜ், ஜெயதேவா மருத்துவமனை, தாவரகெரே என 6 நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்ல உள்ளது.

இதில் ஜெயதேவா மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இண்டர்சேஞ்ச் வசதி உள்ளது. இது 'பிங்க் லைன்' மெட்ரோ வழித்தடம் 'மஞ்சள் லைன்' (ஆர்வி ரோடு - பொம்மசந்திரா) வழித்தடத்துடன் இணைகிறது. இதன்மூலம் ஐடி ஊழியர்கள் உள்பட பிற தனியார் ஊழியர்கள் அதிகமாக பயன்பெறுவார்கள். ஏனென்றால் களேன அக்ரஹாரா மெட்ரோ ரயில் நிலையத்தின் பக்கத்திலேயே பன்னரக்கட்டா ரோடு உள்ளது.

அந்த ரோட்டில் இருந்து எளிதாக நைஸ் ரோடு வழியாக எலக்ட்ரானிக் சிட்டிக்கு செல்லலாம். எலக்ட்ரானிக் சிட்டியை சுற்றி பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்பட பிற தனியார் நிறுவனங்கள் உள்ளதால் இந்த புதிய மெட்ரோ ரயில் சேவை என்பது தாவரகெரே, ஜேபி நகரை சேர்ந்தவர்களுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கும்.

'பிங்க் லைன்' வழித்தடத்தில் இன்னும் 13.75 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் டெய்ரி சர்க்கிளில் இருந்து நாகவரா வரை 12 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் நடைபெற்று வருகிறது. இந்த பணி 2027 மே மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெங்களூரில் 96.1 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன. இன்று புதிதாக 7.5 கிலோமீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரில் மொத்தமாக 103.6 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதிக தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயங்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு அடுத்ததாக 2வது இடத்தில் பெங்களூர் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+