பெங்களூர் மக்களுக்கு ஷாக்.. அதிரடியாக உயர்ந்த மெட்ரோ ரயில் கட்டணம்.. பிப்.,9 முதல் அமல்.. முழு லிஸ்ட்
பெங்களூர்: பெங்களூரில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 10 அடுக்குகளாக டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மெட்ரோ ரயிலில் பெங்களூரில் தான் அதிக கட்டணம் உள்ள நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தள்ளனர். அதன் விவரம் வருமாறு:
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் விரைவாக பயணிக்க மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பெங்களூர் நகரில் மொத்தம் 96.10 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.

அந்த வகையில் பெங்களூருவில் மாதவரா முதல் சில்க் போர்ட் வரை பச்சை வழித்தடத்திலும், ஒயிட்பீல்டில் இருந்து சல்லகட்டா வரை ப்ளூ வழித்தடத்திலும், ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மஞ்சள் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.
கட்டணம் அதிகரிப்பு
தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சமாக ரூ.5 வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.95 ஆகவும் அதிகரித்துள்ளது.
பிப்., 9 முதல் அமல்
இந்த டிக்கெட் கட்டண உயர்வு வரும் 9ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்கு Fare Fixation Committee (FFC) செயல்பட்டு வருகிறது.
இந்த குழுவின் பரிந்ரையின் அடிப்படையில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 10 அடுக்குகளாக டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.
டிக்கெட் உயர்வு விவரம்
* அதன்படி 0-2 கிலோமீட்டர் தொலைவுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* 2 முதல் 4 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 4 முதல் 6 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ30ல் இருந்து ரூ.31 ஆக கூட்டப்பட்டுள்ளது.
* 6 முதல் 8 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.40ல் இருந்து ரூ.42 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* 8 முதல் 10 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.53 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
* 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.60 ல் இருந்து ரூ.63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.70ல் இருந்து ரூ.74 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.80ல் இருந்து ரூ84 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* 25 கிலோமீட்டர் தொலைவுக்கும் மேலான பயணத்துக்கான கட்டணம் ரூ.90 ல் இருந்து ரூ.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை எடுத்து கொண்டால் இந்தியாவிலேயே அதிக கட்டணம் உள்ள சேவையாகும். இப்படியான சூழலில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது பயணிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.
இந்த கட்டண உயர்வுக்கு மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முதல்வர் பதிலடி
இதற்கு முதல்வர் சித்தராமையா, ‛‛பெங்களூர் மெட்ரோ ரயில் கட்டணத்தை மாநில அரசு நிர்ணயம் செய்வது இல்லை. அதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரையில் தான் கட்டணம் உயர்த்தப்படுகிறது'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications