பெங்களூருவில் அந்த வீடியோ பார்த்த மனைவி.. வீட்டுக்கு வந்த கணவன்! அடுத்து நடந்ததை கண்டு உறைந்த மக்கள்
பெங்களூரு: பெங்களூருவில் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தாராம் மனைவி.. அப்போதுதான் கணவன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.. உடனே தகராறு வெடித்துள்ளது.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?. 2 உயிர்கள் அடுத்தடுத்து பறிபோய்விட்டன.. இதுகுறித்த விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.. ஆனால், 2 குழந்தைகளும் தாய், தகப்பன் இல்லாமல் அழுது கொண்டிருக்கின்றன.
பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விபூதிபுராவில் வசித்து வருபவர்கள் ராகவேந்திரா மற்றும் அவரது மனைவி சுருதி. ராகவேந்திரா ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். சுருதி வீட்டு வேலை செய்து வருகிறார்.

பெங்களூர் மனைவி ரீல்ஸ்
2 பேருமே தாவணகெரேயை சேர்ந்தவர்கள். ஒருவரையொருவர் உயிருக்குயிராக காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள்.. திருமணமாகி 17 வருடமாகிறது.. 2 குழந்தைகளம் உள்ளனர்.
திருமணத்துக்குப் பிறகு பெங்களூருக்கு குடிபெயர்ந்துளளனர்.. விபூதிபுராவில் சொந்தமாக வீடு வாங்கி அங்கே குடியேறியுள்ளனர். அவர்கள் வசித்த கட்டிடத்தின் மேல்தளத்தில் ராகவேந்திராவின் பெற்றோரும் வசித்து வந்துள்ளனர்.
கணவன்-மனைவி இடையே ஏற்கனவே குடும்ப பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளன.. இதற்கு காரணம், சுருதி எப்போது பார்த்தாலும் செல்போனிலேயே மூழ்கி கிடப்பதுதான்.. செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வருவதும், எந்நேரமும் ரீல்ஸ் வீடியோவை பார்த்து கொண்டிருப்பதும் ராகவேந்திராவுக்கு பிடிக்கவில்லையாம்.
குடிகார ராகவேந்திரா
இந்த ரீல்ஸ் வீடியோவில் மூழ்கிவிடுவதால், தனக்கு சரியாக சமைத்துக் கொடுப்பதில்லை என்றும் ராகவேந்திரா அடிக்கடி புகார் சொல்லி வந்துள்ளார்.. உடனே சுருதி, "நீங்க மட்டும் உங்க விருப்பப்படி தினமும் மது குடிச்சிட்டு வர்றீங்களே, நான் என் விருப்பப்படி ரீல்ஸ் பார்க்குறேன்" என்று பதிலுக்கு ராகவேந்திரா மீது குற்றஞ்சாட்டுவாராம்.
ஒருநாள் இந்த பிரச்சனை முற்றி, தகராறு வெடித்துள்ளது.. இதனால் போலீஸ் ஸ்டேஷன் வரையும் இவர்கள் விவகாரம் சென்றுள்ளது. அப்போது போலீசார் இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கி, சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அதன்பிறகும் அவர்களுக்குள் பிரச்சனை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
பீர் பாட்டிலால் தாக்குதல்
நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது அவர்களின் 2 குழந்தைகள் ஸ்ருதியின் பெற்றோர் வீட்டில் இருந்திருக்கிறார்கள்.. இரவு ராகவேந்திரா வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.. அப்போது சுருதி வழக்கம்போல் செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடி ரசித்துள்ளார்..
இதைப் பார்த்ததுமே ராகவேந்திராவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியிருக்கிறது.. உடனே தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியுள்ளது.. ஆத்திரம் தாங்காமல் சுருதியை பீர் பாட்டிலால் ஸ்ருதியை தாக்கியிருக்கிறார்.. பீர் பாட்டில் தாக்குதலில் சுருதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இதை பார்த்ததுமே அதே பீர் பாட்டிலால் தன்னையும் குத்திக்கொண்டார் ராகவேந்திரா. அத்துடன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டார்.
பாவம் அந்த 2 குழந்தைகள்
நேற்று காலை 6 மணி முதல் 6.30 மணியளவில் வீட்டில் 2 பேர் அசைவின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதனால் விரைந்து வந்து போலீசார் பார்த்தபோது சுருதி பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்தார்; ராகவேந்திராவும் உயிரிழந்திருந்தார். சம்பவம் குறித்து எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்தவர்கள் இன்று உயிருடன் இல்லை.. அம்மா, அப்பா இல்லாமல் அந்த 2 குழந்தைகளும் அழுதபடியே உள்ளனர்..!!


Click it and Unblock the Notifications
