பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் - போக்குவரத்து பாதிப்பு
பெங்களூர்: பெங்களூர் நகரில் நேற்று இரவில் திடீரென்று பெய்த கனமழையால் பல சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

பெங்களூரில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை எப்போது செப்டம்பர் மாதம் முடிவுக்கு வரும். இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் நேற்று இரவு பெங்களூர் நகரின் பல்வேறு இடங்களில் திடீரென்று கனமழை வெளுத்து வாங்கியது.
யஷ்வந்தபுரா, மெஜஸ்டிக், மல்லேஸ்வரம், காந்தி நகர், பசவேஸ்வரா நகர், ராஜாஜிநகர், மாகடி ரோடு, கார்பரேஷன், மார்க்கெட், லால்பாக், சிவாஜி நகர், ஒயிட்பீல்ட், மாரத்தஹள்ளி, ஹொரவர்துலா ரோடு, பெல்லந்தூர், எச்எஎஸ்ஆர் லே-அவுட், ஓசூர் ரோடு, பாலகெரே ஜங்ஷன், தனிச்சந்திரா, நாகவரா, உள்பட அதனை சுற்றிய பட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வேலையை முடித்து வீட்டுக்கு சென் மக்கள் பெரிதும் அவதியை எதிர்கொண்டனர். ஒயிட்பீல்ட், மாரத்தஹள்ளி, ஹொரவர்துலா ரோடு, பெல்லந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் இன்று காலையிலும் பெங்களூர் புறநகர் பகுதிகளில் லேசாக மழை பெய்தது. பெங்களூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த மழை இதமான சூழலை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி இன்றும் பெங்களூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்றும் லேசானது முதல் மிதமானது வரை பெங்களூரில் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பெங்களூர் தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று சாம்ராஜ் நகர், சிக்கமகளூர், ஹாசன், மண்டியா, மைசூர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
கடலோர கர்நாடகாவால் தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா உள்ளிட்ட இடங்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வடகர்நாடகா மாவட்டங்களில் பாகல்கோட்டை, பெலகாவி, தார்வார்,கதக், ஹாவேரி, கொப்பல் மற்றும் விஜயபப்புரா மவாட்டங்களி்ல மணிக்கு 30 கிலோமீட்ர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் பரவலாக மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
