பெங்களூர், தான் பெஸ்ட்.. சென்னை ஓகே.. இந்தியாவிலேயே சிறந்த ‛ஷாப்பிங் ஸ்பாட்’ எது தெரியுமா?லிஸ்ட்
பெங்களூர்: இந்தியாவில் சிறந்த ஷாப்பிங் ஸ்பாட் எது? என்பது பற்றிய ஆய்வில் பெங்களூர் தான் பெஸ்ட் என்பது தெரியவந்துள்ளது. அதாவது டாப் 10 சிறந்த ஷாப்பிங் தெருக்களின் பட்டியலில் பெங்களூரில் அமைந்துள்ள 4 முக்கிய இடங்கள் இருக்கிறது. அதேபோல் சென்னையின் அண்ணாநகரும் ‛டாப்' 10க்குள் இடம்பிடித்துள்ளது
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் மக்கள் ஷாப்பிங் செய்ய வசதியாக ஏராளமான இடங்கள் உள்ளன. இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகமாக ஷாப்பிங் செய்யும் இடங்களை தேர்வு செய்து அதில் எந்த இடம் சிறந்தது என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஆய்வை நைட் ப்ராங்க் எனும் ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது ஒவ்வொரு முக்கிய நகரங்களில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், அங்கு செல்வதற்கு வசதியாக உள்ள பொதுபோக்குவரத்துகள், வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான இடம் உள்பட சிலவற்றை அளவீடாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா முழுவதும் உள்ள 30 நகரங்களில் அந்த குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதலிடத்தை பெங்களூரின் எம்ஜி ரோடு பிடித்துள்ளது. மேலும் டாப் 10 இடத்துக்குள் கமர்சியல் தெரு (Commercial Street), சர்ச் தெரு (Church Street), பிரிகேட் ரோடு (Brigad Road) உள்ளன.

மேலும் இந்த பட்டியலில் 2வது இடத்தில் ஹைதரபாத்தின் சோமாஜிகுடா, 3வது இடத்தில் மும்பையின் லிங்க்கிங் ரோடும், 4வது இடத்தில் டெல்லி சவுத் எக்ஸ்டென்சன் (பார்ட் 1, பார்ட் 2) இடங்கள் பிடித்துள்ளன. கொல்கத்தாவின் பார்க் தெரு மற்றும் மும்பையின் காமக் தெரு ஆகியவை 5வது இடத்தை பிடித்துள்ளன. 6வதுஇடத்தில் சென்னையின் அண்ணாநகர், 7 வது இடத்தில் பெங்களூர் கமர்சியல் தெரு, 8 வது இடத்தில் நொய்டா செக்டார் 18 வது மார்க்கெட் 9 வது இடத்தில் பிரிகேட் ரோடு, 10 வது இடத்தில் சர்ச் தெரு உள்ளிட்டவை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி நைட் ப்ராங்க் இந்தியாவின் துணை தலைவர் திவ்யா அகர்வால் கூறுகையில், ‛‛நாங்கள் நாட்டில் உள்ள 30 முக்கிய ஷாப்பிங் தெருக்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளோம்.இதில் சிறந்த ஷாப்பிங் ஸ்பாட்டை கண்டுபிடிக்க பல்வேறு அளவீடுகளை கொண்டிருந்தோம். பொதுபோக்குவரத்து, வாகன நிறுத்தம், உணவகங்கள், சில்லறை விற்பனை கடைகள் உள்பட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளோம்''என்றார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications