பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட தேவுடா.. எடியூரப்பா, குமாரசாமி நிலைமை இப்படி ஆயிருச்சே.. வெலவெலக்க வைத்த கொஸ்டின் பேப்பர்!

பள்ளி தேர்வு கேள்வி தாளில் எடியூரப்பா, குமாரசாமி பெயர் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: அட தேவுடா.. தேர்தல் ஜூரம் பரீட்சை பேப்பர் வரை வந்துடுச்சே! முதல்வர் குமாரசாமிக்கு இது நல்ல நேரமா அல்லது கெட்ட நேரமா என தெரியவில்லை.. சிபிஐ ரெய்டு.. தர்ணா.. இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது ஒரு சமாச்சாரம்!

பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் மவுண்ட் கார்மெல் என்ற பள்ளி உள்ளது. இது ஒரு ஆங்கில உயர்நிலை பள்ளி ஆகும்.

இந்த பள்ளியில் இப்போது பரீட்சை நடந்து வருகிறது. 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத தயாராக உட்கார்ந்திருந்தார்கள். அப்போது கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதை வாங்கி பார்த்த மாணவர்கள் ஒரே திருதிருவென விழிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

வருமான வரி அதிகாரிகள் வீடுகளில், கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும்.. குமாரசாமி தடாலடி வருமான வரி அதிகாரிகள் வீடுகளில், கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும்.. குமாரசாமி தடாலடி

விவசாயியின் நண்பன்

கேள்விக்கு பதில் தெரியாமல் இல்லை.. கேள்வியே புரியாமல்! அதில் "விவசாயியின் நண்பர் யார்" என்பதுதான் கேள்வி. பேசாமல் கேள்வியுடன் விட்டிருந்தால்கூட பரவாயில்லை.. பிள்ளைகளே சரியான விடையை டக்கென எழுதி முடித்திருப்பார்கள்.

மாணவர்கள் ஷாக்

மாணவர்கள் ஷாக்

ஆனால் அதற்கு ஆப்ஷன்கள் "எஸ்.எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி, மண்புழுக்கள்" என்று தரப்பட்டிருந்தது. இந்த ஆப்ஷன்களை பார்த்துதான் மாணவர்கள் வெலவெலத்து போய் விட்டனர்.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

மாணவர்கள் எப்படியும் மண்புழுவைதான் சரியாக எழுதி இருப்பார்கள். ஆனாலும் இப்படியா ஆப்ஷன்களை தருவது என்று கண்டிப்பாகவே முணுமுணுத்திருப்பார்கள். இந்த கேள்வி தாள் வாட்ஸ்அப்பிலும் பரவி விட்டது. மாணவர்களுக்கு ஆன அதே ஷாக்தான் பொதுமக்களுக்கும் வந்தது.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

இது சம்பந்தமாக பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சம்பந்தப்பட்டவரை வேலையிலிருந்தே நீக்கிவிட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் சொல்லி இருக்கிறார். இருந்தாலும் குமாரசாமி, எடியூரப்பா நிலைமை இந்த அளவுக்கு ஆயிடுச்சே என்பதுதான் மக்கள் கவலை!

English summary
Bengaluru School Question Paper asks Who is the Farmers Friend and the Options are Kumarasamy, Yeddyurappa or Earthworms
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X