இருக்கிற டிராபிக்கில் இதுவேறயா.. நாட்டிலேயே அதிக கார்கள்.. டெல்லியை ஓவர்டேக் செய்த பெங்களூர்!
பெங்களூர்: நாட்டிலேயே தனிநபர்கள் அதிகம் பேர் கார் வைத்திருக்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லியை பின்னுக்கு தள்ளி பெங்களூர் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூர் நகரத்தில் மட்டும் தனிநபர் பயன்பாட்டு கார்கள் 23 லட்சம் உள்ளன.
இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தனிநபர் வாகன பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இடையில் கொரோனா காலத்தில் சற்று மந்தமான கார் விற்பனை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. டெல்லி, பெங்களூர், மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வாகன பயன்பாடு அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

அதிலும் நாட்டிலேயே தனிநபர் பயன்பாட்டிற்கு அதிக கார்களை வைத்திருக்கும் நகரமாக டெல்லி இருந்தது. இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு வாகனங்கள் எண்ணிக்கை குறித்து கையேட்டை டெல்லி வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் டெல்லியை பின்னுக்கு தள்ளி பெங்களூர் லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரில் மட்டும் தோராயமாக 23 லட்சம் கார்கள் உள்ளன.
வாகனங்கள் பதிவு: டெல்லி அரசு வெளியிட்ட புள்ளி விவர பட்டியலில் கடந்த ஆண்டு நகரில், 79.75 லட்சம் வாகனங்கள் இருப்பதாகவும், இதில் 20.7 லட்சம் வாகனங்கள் பிரவேட் கார்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும் 2020 - 21 ஆம் ஆண்டில் டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை 1.2 கோடி என்றும் இதில் 33.8 லட்சம் தனிநபர் கார்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பழைய வாகனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்த பிறகு 2021 - 2022 மற்றும் 2022 - 23 ஆம் ஆண்டுகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு ரத்து செய்யப்பட்டது.
டெல்லிக்கு அடுத்த படியாக: 1.4 லட்சம் வாகனங்கள் அழிக்கப்பட்டன. 6.2 லட்சம் வாகனங்கள் பிற மாநிலங்களில் மறுபதிவு செய்யப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
தற்போது டெல்லியில் பழைய வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு அவற்றின் பயன்பாடு நிறுத்தப்பட்டு இருப்பதால் நாட்டிலேயே அதிக தனிநபர் கார்கள் இருக்கும் நகரமாக பெங்களூர் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரை பொறுத்தவரை ஏற்கனவே இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக உள்ளது. உலக அளவில் லண்டனுக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்து கொண்ட நகரமாக பெங்களூர் உள்ளது.
ஆய்வறிக்கை: பெங்களூரில் பீக் நேரங்களில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் 10 நொடிகள் சராசரியாக ஆகின்றன என்றும் பிசியான நேரங்களில் சராசரி வேகம் வெறும் 18 கி.மீட்டர் தான் என்றும் ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. வாகன ஓட்டிகளை திண்டாட வைக்கும் வகையில் பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் நிலையில் தற்போது நாட்டிலேயே கார்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட நகரமாகவும் பெங்களூர் முதலிடத்தில் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications