பெங்களூரு தியேட்டரில் படம் பார்த்துட்டேயிருந்தவர் அலறி ஓட்டம் ஏன்? 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல முக்கிய பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. இந்நிலையில், பெலகாவி, தார்வார், கதக், பல்லாரி, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர், பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர், கோலார், சிக்கபள்ளாப்பூர் மற்றும் துமகூரு ஆகிய 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ஹெப்பால், ராஜாஜிநகர், மெஜஸ்டிக், ஒயிட்ஃபீல்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடகாவின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Bengaluru Rain Karnataka Weather Theatre Incident 17

பெங்களூரு பாரதி தியேட்டர்

பெங்களூரு பீன்யா-தாசரஹள்ளி பகுதியில் உள்ள பாரதி தியேட்டரிலும் கனமழை காரணமாக எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. ஜலகள்ளி கிராஸ் அருகே உள்ள பாரதி தியேட்டரில் பிரேமட ஊராளி என்ற கன்னட படம் ஓடிக்கொண்டிருந்தது..

அப்போது திடீரென பெய்த மழையின் காரணமாக தியேட்டரின் கூரையின் ஒரு பகுதியும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) மேற்கூரையும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த 3 பேர் காயமடைந்தனர்.. 2 பேருக்கு தலையிலும், ஒருவருக்கு காலிலும் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

அலறியடித்து வெளியேறிய மக்கள்

எனினும் மேற்கூரை விழுந்ததுமே, தியேட்டரில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தார்கள்.. இதையடுத்து, பாதுகாப்பு அச்சம் காரணமாக வெளியேறிய பார்வையாளர்களுக்கு திரையரங்க நிர்வாகம் கட்டணத்தை திருப்பிச் செலுத்தியதோடு, பாதிக்கப்பட்ட கூரை தற்காலிகமாக மூடப்பட்டு மற்றவர்களுக்கான திரையிடல் தொடர்ந்து நடத்தப்பட்டது... ஆனால் நிர்வாகத்தின் அஜாக்கிரதையே இந்த விபட்டுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அதேபோல இதேபோல் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காஞ்சல்லி, தசனதொட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் மழைநீர் புகுந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

இதனிடையே, கர்நாடகாவின் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெலகாவி, தார்வார், கதக், பல்லாரி, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர், பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர், கோலார், சிக்கபள்ளாப்பூர் மற்றும் துமகூரு ஆகிய 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை நேரத்தில் சில இடங்களில் மின்தடை ஏற்படலாம். பலத்த காற்று வீசும்போது மரக்கிளைகள் முறிந்து விழுவதுடன், சாலைகளில் டிராபிக் ஏற்பட வாய்ப்புள்ளது... மழை அதிகமாக இருக்கும் நேரத்தில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பதுடன், வாகனங்களில் செல்லும்போதும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெயில் சதம்

கர்நாடகாவில் இப்படி ஒரு பக்கம் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, தமிழகத்தில் சில பகுதிகளில் வெயிலும் தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது.

தமிழகத்தில் 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது... அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 103.1 டிகிரி பாரன்ஹீட் (39.5 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவானது. ஈரோடு மற்றும் மதுரை நகரில் தலா 101.48 டிகிரி பாரன்ஹீட் (38.6 டிகிரி செல்சியஸ்), மதுரை விமான நிலையத்தில் 101.12 டிகிரி பாரன்ஹீட் (38.4 டிகிரி செல்சியஸ்), திருச்சிராப்பள்ளியில் 100.94 டிகிரி பாரன்ஹீட் (38.3 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+