மோசமான பெங்களூர் டிராபிக்.. 6.5 கிலோமீட்டரை கடக்க எவ்வளவு நேரம் தெரியுமா? இதெல்லாம் ஓவர்ங்க
பெங்களூர்: பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் காரில் வீடு மற்றும் அலுவலகம் இடையேயான 6.5 கிலோமீட்டர் தொலைவை கடக்க ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஆனதாக கூறியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பெங்களூர் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆண்டுதோறும் அங்கு அதிகரித்து வரும் மக்கள் தொகையும், வாகன பெருக்கமும் தான் முக்கிய காரணம்.

குறிப்பாக காலை, மாலை வேளைகளில் நகரின் பல்வேறு முக்கிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஆமை வேகத்தில் தான் நகர்ந்து வருகின்றன.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு கிடைக்கவில்லை. இதனால் தினம் தினம் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
வீட்டில் இருந்து அலுவலகம்
இந்த வீடியோவை வெளியிட்ட நபரின் பெயர் பங்கஜ் ஹுரியா. இவர் பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் இடையே 6.5 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இந்த பாதையில் தினமும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த 6.5 கிலோமீட்டர் தொலைவை கடக்க ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் எடுத்து கொண்டதாக அவர் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
கடும் போக்குவரத்து நெரிசல்
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ''காலை 9:15 மணிக்கு வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு புறப்பட்டேன். அலுவலகம் வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் 6.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரை மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்தும் சாலைகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் இப்போது நிற்கிறது.
ஒரு மணிநேரம் ஒரு நிமிடம்
இன்னும் 4.4 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். என் அலுவலகத்துக்கு நான் காலை 10:16 மணிக்கு செல்வேன். 6.5 கிலோமீட்டர் தொலைவை கடக்க ஒரு மணிநேரத்துக்கு மேலாகிறது. இதுதான் பெங்களூரின் உண்மையான நிலை'' என்று தனது அதிருப்தியை காட்டி உள்ளார். மேலும் இதற்கு சாட்சியாக அவர், தனது காரின் இன்ஃபோடெயின்மென்ட் திரையில் இயங்கும் கூகிள் மேப்பை காட்டுகிறார்.
வைரலான வீடியோ
இந்த வீடியோ தற்போது பலருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் பெங்களூர் டிராபிக் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பெங்ளூர் போர்வெல் சாலையில் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவர், ''பெங்களூர் போர்வெல் சாலையின் உண்மையான நிலை'' இதுதான் என்று கூறியுள்ளார். இன்னொருவரோ, ''புனேவிலும் இதுதான் நிலைமை'' என்று கூறியுள்ளார். இப்படியாக ஒவ்வொருவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications