பைக்ல டிராவல் பண்ணுறோமா.. சைக்கிளில் போறோமா.. பெங்களூர் டிராபிக்கால் குழம்பி போன "ஸ்மார்ட் வாட்ச்"
பெங்களூர்: பீக் நேரங்களில் பெங்களுரில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் சிரமத்தை அவ்வப்போது நெட்டிசன்கள் தங்கள் பாணியில் ஜாலியாக பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் பெங்களூர் டிராபிக்கால் ஸ்மார்ட் போனே சைக்கிளில் செல்கிறோமா.. பைக்கில் செல்கிறோமா என குழம்பிவிட்டதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். இங்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஐடி நிறுவனங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களின் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், எப்போதும் பெங்களூர் நகரம் பரபரப்பாக காணப்படும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் பெங்களூர் சாலைகளில் இருக்கும் டிராபிக் பற்றி சொல்லவே தேவையில்லை.

உலக அளவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகரங்களில் ஒன்று பெங்களூர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் அணி வகுத்து நிற்பதை காண முடியும். சில சிக்னல்களில் எல்லாம் பல நிமிடங்கள் காத்திருந்து செல்லும் நிலைமை இருக்கும். பெங்களூரு டிராபிக் பற்றி கிண்டலாகவும் கேலியாகவும் அவ்வப்போது சில நேரங்களில் மீம்ஸ்களை நெட்டிசன்கள் தெறிக்க விடுவதுண்டு.
லஞ்ச் சாப்பிட்ட பஸ் டிரைவர்: குறிப்பாக பெங்களுர் டிராபிக்கில் நின்ற படியே பலரும் தங்கள் அலுவலக வேலைகளை செய்ய தொடங்குவது, டிராப்பிக்கில் காத்திருக்கும் நேரத்தில் பிரேக் பாஸ்ட், லஞ்ச் ஆகியவற்றை முடித்து விடுவது போன்ற காட்சிகளும் இணையத்தில் அவ்வப்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு பெங்களூர் டிராப்பிக்கின் கொடூரத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது போல இருக்கும்.
கடந்த மாதம் கூட பெங்களூரின் சில்க் ரோடு சந்திப்பில் டிராபிக்கில் சிக்கியிருந்த ஒரு பேருந்து ஓட்டுநர், டிரைவர் சீட்டில் இருந்தபடியே தனது லஞ்சை சாப்பிட்டு முடித்த வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆனது. அந்த வகையில், பெங்களூர் டிராபிக்கின் நிலையை சுட்டிக்காட்டும் விதமாக கவேல் ஒபராய் என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்த ஒரு பதிவு இணையத்தில் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் வாட்சில் வந்த மெசேஜ்: தனது அலுவலகத்திற்கு ரேபிடோ பைக்கில் கவால் ஓபராய், பெங்களூரு டிராபிக்கில் மாட்டிக்கொண்டார். பைக் நத்தை போல மெது மெதுவாக சென்று இருக்கிறது. இதென்னாடா கொடுமை.. என நொந்தபடியே தனது ஸ்மார்ட் வாட்சை பார்த்து இருக்கிறார். அதில் வந்த மெசேஜ் தான் அவரை சிரிக்க வைத்துள்ளது. டிராபிக்கால் பைக் சென்ற வேகத்தை பார்த்து ஸ்மார்ட் வாட்ச், அவர் சைக்கிளில் செல்வதாக கருதி மெசேஜ் செய்துள்ளது.
நீங்கள் கடுமையாக உடற்பியிற்சியில் ஈடுபடுவது போல தெரிகிறது என மெசேஜ் டிஸ்பிளே ஆகியுள்ளது. இதைப் பார்த்து சிரித்தபடியே ஒரு கிளிக் செய்து தனது ட்விட்டரில் பகிர்ந்து விட்டார். இந்த பதிவு இணையதத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது ஆப்பிள் வாட்ச் இல்லை ஆயிரம் ரூபாய் வாட்சாக இருக்கும் என சில நெட்டிசன்கள் கேலியாக பதிவிட சிலரோ, தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications